ETV Bharat / state

"போராட்டங்களுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது பாரபட்சமின்றி முடிவு" - காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! - MADRAS HIGH COURT

போராட்டங்களுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது பாரபட்சமின்றி முடிவு எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2025, 2:07 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது பாரபட்சம் இன்றி முடிவெடுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கவில்லை என அனுமதி மறுத்த காவல்துறையினருக்கு எதிராக பாமக கொள்கை பரப்புச் செயலாளர் சேகர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவர் அந்த மனுவில், ஆளுநரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த ஒரே நாளில் அனுமதி வழங்கி உள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கில் பதிலளித்த காவல்துறை, திமுக ஆர்ப்பாட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும், அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 43 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்திருந்தது.

இந்த நிலையில் இந்த மனு இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, போராட்டங்களுக்கு அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களின் மீது காவல்துறையினர் எந்த பாரபட்சமும் இல்லாமல் தங்கள் கடமையை செய்ய வேண்டும் என்றும், விண்ணப்பங்களின் மீது முடிவெடுக்கும் முன் சம்பந்தப்பட்டவர்கள் தரப்பினர் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி பாமக மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.