ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி... 'கடலைகுளத்துக்கு ரோடு வரப்போகுது'... வேலூர் கலெக்டருக்கு பறந்த நோட்டீஸ்! - KADALAIKULAM VILLAGE

வேலூர் கடலைகுளம் மலை அடிவாரத்தில் சாலை வசதி ஏற்படுத்தக்கோரி ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டிருந்தது. அதன் எதிரொலியாக வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடலைகுளம் பகுதி மக்கள்
கடலைகுளம் பகுதி மக்கள் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2025, 3:31 PM IST

Updated : Jan 31, 2025, 5:06 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம் தோலபள்ளி அடுத்த கடலைகுளம் (கிருஷ்ணாவரம்) பகுதியில் சாலை வசதியில்லாமல் மலை அடிவார கிராம மக்கள் மலையிலிருந்து வரும் ஓடை வழியாக 5 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

இது குறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு, அக்கிராம மக்களின் வேதனையை விவரித்து கடந்த மாதம் 11ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. இதன் எதிரொலியாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தோலபள்ளி அடுத்த கடலைகுளம் மலை அடிவார கிராம பகுதியில் 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 5 தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். மலையில் இருந்து சாலைக்கு வர வழி இல்லாததால் இவர்கள் முட்செடிகளும், புதர்களும் சூழ்ந்துள்ள கானாறு ஓடை வழியாகத்தான் நடந்து செல்லும் நிலை உள்ளது.

மக்கள் வேதனை

இதுகுறித்து அக்கிராம மக்களிடம் கேட்டபோது, '' சுமார் ஐந்து கிலோ மீட்டர் துாரம் கொண்ட இந்த கானாறு பாதை முழுவதும் முட்செடிகளும், புதர்களும் சூழ்ந்துள்ளது. அதோடு கானாறு பகுதிக்கு அருகே விஷபூச்சிகள் மற்றும் காட்டு பன்றிகள் நடமாட்டத்துக்கு இடையே கல்வி கற்பதற்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். மழைக் காலங்களில் கானாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அதோடு அவசர தேவைக்கும் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது.

மழைக் காலங்களில் போக்குவரத்து துண்டிக்கப்படும் போது தனிமையில் வசித்தும் வருகின்றனர். மழைக் காலங்களில் குழந்தைகளை அவர்கள் பள்ளிக்கு அனுப்புவதும் இல்லை என்பதால் தமிழ்நாடு அரசு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என ஈடிவி பாரத் ஊடகத்தின் வழியாக கோரிக்கை வைத்திருந்தனர்.

இதையும் படிங்க: ஒரு ரூபாய் சாக்லேட் வாங்க கூட கரடு முரடான ஓடையில் அச்சமூட்டும் பயணம்.. கடலைகுளம் நேரடி விசிட்! -

அதைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு மனு அளித்திருந்தார். இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், கடலைக் குளம் என்கின்ற கிருஷ்ணாவரம் பகுதியில் வாழும் பொது மக்களுக்கு மின்சார, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து 15 நாட்களுக்குள் விளக்கத்தை அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மனமகிழ்ந்து பேசிய கடலைகுளத்து பெண்

இதுகுறித்து கடலைகுளத்தை சேர்ந்த பேபி கூறுகையில், '' எங்க பகுதிக்கு சாலை வசதி கிடையாது. ஊரிலிருந்து செல்லவேண்டுமானால் கானாறு வழியாகதான் போகிறோம். அந்த வழியாகத்தான் வருகிறோம். சாலை வசதி கேட்டு பலமுறை கலெக்டருக்கு மனு கொடுத்தோம். ஆனால், கண்டுக்கவே இல்லை. சில நாட்கள் முன்பு இதுகுறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்தோம். இப்பொது எங்கள் ஊருக்கு சாலை வசதி வர போகிறது. எங்கள் கோரிக்கையை செய்தியாக்கிய ஈடிவி பாரத்திற்கு நன்றி'' என அவர் கூறினார்.

Last Updated : Jan 31, 2025, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.