ETV Bharat / state

"காணும் பொங்கலுக்கு ஒன்று கூடுவது தான் கலாச்சாரமே தவிர, குப்பை போடுவது அல்ல" - தீர்ப்பாயம் - NATIONAL GREEN TRIBUNA

காணும் பொங்கல் தினத்தில் பொது இடங்களில் கூடும் மக்கள் குப்பை போடுவதை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்? என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2025, 2:10 PM IST

சென்னை: காணும் பொங்கல் தினத்தில் பொது இடங்களில் கூடும் மக்கள் குப்பை போடுவதை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்? என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

காணும் பொங்கல் தினத்தில் மெரினாவில் திரண்ட மக்களால் கடற்கரை குப்பை கூளமான விவகாரம் தொடர்பாகத் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்தியகோபால் அமர்வு முன்பு நேற்று (ஜன.30) விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பிலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரப்பிலும், கலாச்சார பண்டிகைகளின் போது குப்பை போடுவது என்பது நாடு முழுவதும் உள்ள பிரச்சனை எனவும், மக்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். மாநிலத்தில் பெரும்பாலான ஊர்களில் காணும் பொங்கல் தினத்தில் கூடிய மக்களால் ஏற்படும் குப்பைகள் அடுத்த நாளோ, அதற்கு மறுநாளோ, முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு விடுகிறது எனவும் குறிப்பிட்டனர்.

இதையும் படிங்க: கைதிகள் அவர்களது குடும்பத்துடன் பேச அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? - நீதிபதிகள் கேள்வி!

இதையடுத்து, காணும் பொங்கலுக்கு திரளும் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில் போலீசாரை நியமிக்கப்பட்டு, அறிவிப்புகள் அறிவிக்கப்படுவதைப் போல், குப்பை போட்டால் அபராதம் விதிக்கப்படும் என ஏன் அறிவிப்புகள் வெளியிடக் கூடாது? எனக் கேள்வி எழுப்பிய தீர்ப்பாயம், விநாயகர் சதுர்த்தியைப் போலக் காணும் பொங்கல் பண்டிகைக்கும் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

மேலும், காணும் பொங்கல் பண்டிகைக்கு ஒன்று கூடுவது தான் கலாச்சாரமே தவிரக் குப்பை போடுவது கலாச்சாரம் அல்ல என வேதனை தெரிவித்த தீர்ப்பாயம், இந்த விஷயத்தில் தமிழக அரசு முன் மாதிரியாக செயல்பட வேண்டும் எனக் கூறி, வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் உத்தரவிட்டு, அது தொடர்பான விசாரணையை மார்ச் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.