முதலமைச்சர் ஆவதற்கு பி.கே.,வுக்கு கோடிக்கணக்கில் பணம் - அன்புமணி தாக்கு - அன்புமணி தேர்தல் பிரச்சார காணொலி
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட பாமக இளைஞரணித் தலைவர், “முதலமைச்சர் ஆவதற்கு பிகாரைச் சேர்ந்த பிரஷாந்த் கிஷோருக்கு (பி.கே) கோடிக்கணக்கில் பணம் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். இதிலிருந்தே தன்னம்பிக்கை அற்றவர் ஸ்டாலின் என்பது தெளிவாகிறது. அவர் முதலமைச்சர் ஆவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வார்; எம்மாதிரியான பொய்களையும் கூறுவார்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்தால் போலி கூட்டுறவு சங்கங்கள் உருவாகும். போலி பட்டு கூட்டுறவு சங்கங்கள் அமைத்து கொள்ளை நடைபெறும். வன்னியர்களுக்கு 10.5% வாங்கித் தந்தது போல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து சமுதாய மக்களுக்கும் உரிய இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவதே தனது லட்சியம் என சூளுரைத்தார்.
Last Updated : Mar 21, 2021, 12:13 PM IST