கரோனாவால் களையிழந்த தைப்பூசத் திருவிழா - எர்ணாவூர் முருகன் கோயில்
🎬 Watch Now: Feature Video
சென்னை: எர்ணாவூர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 5 ஆயிரம் பெண்கள் பால்குடம் ஏந்தி, ஊர் முழுவதும் ஊர்வலமாக வருவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக ஊர்வலத்திற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் மூன்று பேர் மட்டும் பால்குடம் ஏந்தி வந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் வருகையின்றி தைப்பூசம் களையிழந்தது.