சாவதற்கு சம்பளம் வாங்குபவர்கள் 'காப்பான்' - கே.வி. ஆனந்த்
🎬 Watch Now: Feature Video
'காப்பான்' திரைப்பட குழுவினர் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் கே.வி. ஆனந்த், நடிகர்கள் சூர்யா, ஆர்யா, சமூத்திரகனி நடிகை சாயிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது கே.வி. ஆனந்த் பேசுகையில், சுதந்திரத்திற்கு பிறகு பல பிரதமர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்திரா காந்தி கொலைக்கு பிறகு எஸ்.பி.ஜி என்கிற புதிய பாதுகாப்புக் குழு தொடங்கப்பட்டது. தற்போது அதில் 3 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
காவல் ராணுவ வீரர்கள் போல் அல்லாமல், இவர்கள் சாவதற்கு சம்பளம் வாங்குபவர்கள். இவர்கள். காவல்துறை, ராணுவம் பற்றி பல படங்கள் வந்துள்ளன. இவர்கள் பற்றி படம் இதுவரை வரவில்லை.
2012ஆம் ஆண்டிலேயே படத்தின் கருவை பதிவு செய்திருந்தோம். மிகவும் டெடிகேட் ஆன நடிகர் யார் என யோசித்த போது சூர்யா தான் இந்த கதைக்கு சரியாக இருப்பார் என முடிவு செய்தோம். என்றார்.
Last Updated : Sep 19, 2019, 3:04 PM IST