'ஞானச்செருக்கு' படத்தில் எந்த வணிக நோக்கமும் இல்லை - திருமாவளவன் - ஞானச்செருக்கு
🎬 Watch Now: Feature Video
இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் மறைந்த ஓவியர் வீரசந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஞானச்செருக்கு'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இயக்குநர்கள் எஸ்.பி. முத்துராமன், கௌதமன், சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய திருமாவளவன், ’ஞானச்செருக்கு’ திரைப்படத்தை எளிய தமிழில் அறிவு திமிர் என அழைக்கலாம். இந்த படத்தில், காதல், குத்துப்பாட்டு என எந்த வணிக நோக்கமும் இல்லை. உச்சத்தில் இருக்கும் நடிகனால் காலப்போக்கில் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு ஏற்ற சுவையில் நடிப்பு தர முடியாது. இது தலைமுறை இடைவெளி.
கலரும் இல்லை எம்ஜிஆர் மாதிரியும் இல்லை எப்படி ரஜினி படம் ஓடுகிறது என்று கேட்டார்கள். இதையெல்லாம் தாண்டிதான் ரஜினியும், விஜயகாந்தும் வெற்றிபெற்றனர். கலை படைப்புக்கு எந்த சுவையும் இல்லை என்றார்.