வேலூரில் பெண்ணை விரட்டி மிதித்த யானை.. பதைபதைக்க வைக்கும் வீடியோ! - வேலூர் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
வேலூர்: பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் கோபால் என்பவரின் மனைவி கோகிலா. இவர் தனது விவசாய நிலத்தில் வழக்கம் போல் பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த ஒற்றை யானை கோகிலாவை துரத்திச் சென்று மிதித்தது. இதில் கோகிலா படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் யானையை கூச்சலிட்டு விரட்டினர்.
பின்னர் காயமடைந்த கோகிலாவை மீட்டு பேரணாம்பட்டு முதலுதவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அடுத்து பேரணாம்பட்டு வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அடிக்கடி ஒற்றை யானை குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதும், விவசாய நிலங்களை நாசம் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில் இதுபோன்ற சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மாடு மேய்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வேலூரில் நிகழ்ந்த பகீர் சம்பவம்!