ETV Bharat / bharat

பஞ்சாப் அரசிடம் சமரச போக்கு இல்லை....உச்ச நீதிமன்றம் விமர்சனம்! - SC TO PUNJAB GOVERNMENT

சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவாலுக்கு மருத்துவ உதவி அளிக்க வேண்டும் என பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் (Image credits-Getty Images)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2025, 7:20 PM IST

புதுடெல்லி: வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயத்துக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 26ஆம் தேதி முதல் ஜக்ஜித் சிங் தலேவால் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அவரது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக அவருக்கு மருத்துவ உதவி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கக் கூறி பஞ்சாப் அரசை உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்துள்ளது.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜால் புயான் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "தலேவால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர எந்த உத்தரவும் பிறபிக்கப்போவதில்லை.அவரது உடல் நிலை குறித்து மட்டும் கவலை தெரிவிக்கின்றோம்.அவருக்கு மிகவும் அவசரமாக மருத்துவ உதவி அளிக்க வேண்டும்,"என்று வலியுறுத்தினர்.

அப்போது வாதிட்ட பஞ்சாப் அரசு வழக்கறிஞர் குருமிந்தர் சிங், "மாநில அரசு இந்த விஷயத்தில் பாகுபாடான நிலைப்பாடு கொண்டிருக்கவில்லை,"என்று கூறினார். ஊடகங்களில் சில விவசாயிகளின் தலைவர்கள், மாநில அரசு அதிகாரிகள் பொறுப்பில்லாத வகையில் அறிக்கைகள் வெளியிடுவதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. "விவசாயிகளின் போராட்டம் குறித்து ஒரு குழு அமைக்க உச்ச நீதிமன்றம் முன் வந்திருப்பது குறித்து அரசிடம் கூறினீர்களா? உங்கள் (பஞ்சாப் அரசு) நிலைப்பாடு சமரச போக்கு கொண்டதாக இல்லை. அதுதான் பிரச்னை,"என்று நீதிபதிகள் கூறினர்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை சம்பவம்; பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு நேரில் விசாரணை..!

"மருத்துவ உதவியுடன் தலேவால் உண்ணாவிரதம் மேற்கொள்ளலாம். குழுவின் பங்களிப்பு என்பது முக்கியம் வாய்ந்தது. இந்த விஷயத்தில் அரசியல் அறிக்கைகள் வெளியிடுபவர்கள் பற்றி உச்ச நீதிமன்றம் அறிந்திருக்கிறது. அவர்களில் விவசாயிகளின் தலைவர்களும் உள்ளனர். தலேவாலுக்கான அவர்களின் நம்பிக்கை என்ன என்பதையும் பார்க்க வேண்டும்," என்று நீதிபதிகள் கூறினர்.

"விவசாயிகள் சங்க தலைவர் என்ற முறையில் அவரது உயிர் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் எந்த ஒரு அரசியல் சிந்தாந்தத்தையும் கொண்டிருக்கவில்லை. விவசாயிகளுக்காகவே அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்குகிறீர்களா என பஞ்சாப் அரசு அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும்,"என நீதிபதிகள் கூறினர்.

இந்த விஷயத்தில் அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு வசதியாக கூடுதல் அவகாசம் அளிக்கும்படி பஞ்சாப் மாநில அரசின் சார்பில் கேட்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 6ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதாரவிலை அளிப்பதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பது உட்பட 13 கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.