ETV Bharat / state

காட்டுக்குள் கிடந்த காரின் டயர்.. நத்தம் அருகே கோர விபத்தில் 2 பெண்கள் பலி.. 10 பேர் காயம்..! - DINDIGUL CAR ACCIDENT

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோரமான கார் விபத்தில் இரு பெண்கள் பலியான நிலையில் பத்து பேர் காயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான கார், காட்டுக்குள் கிடந்த டயர்
விபத்துக்குள்ளான கார், காட்டுக்குள் கிடந்த டயர் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2025, 7:53 PM IST

திண்டுக்கல்: கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் மிதுன்ராஜ் (42). இவர் திருச்சியில் உள்ள பவர் கிரீட் என்னும் அரசு நிறுவனத்துக்கு சொந்தமான மின்சார வாரியத்திற்கு பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

விடுமுறையை முன்னிட்டு கேரளாவில் இருந்து வந்திருந்த குடும்பத்தைச் சேர்ந்த குண்ணிகண்ணன் (64), இவானி (3), இசானி (3), ஷிமானி(6), செபின்(38), அஸ்வத்(28), அருந்ததீ(18), அஞ்சலி (31), அஜித்தா (40), மிதுன்ராஜ் (42), ஷோபனா (51), சோபா (45) ஆகியோருடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டு, திருச்சியில் இருந்து மதுரை வந்துள்ளனர்.

காரை மிதுன்ராஜ் ஓட்டி வந்துள்ளார். அனைவரும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனத்தை முடித்துவிட்டு, மீண்டும் திருச்சி செல்வதற்காக மதுரையில் இருந்து துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் வழியாக திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள புதுப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மைல் கல் மேல் மோதி பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் 100 மீட்டர் தூரத்தில் உள்ள பாலத்தின் தடுப்பில் மோதி கார் உருகுலைந்துள்ளது.

இதையும் படிங்க: மணிப்பூரை விடுங்க.. கனிமொழி இதுக்கு பதில் சொல்லணும் - பாஜக மகளிரணியினர் ஆவேசம்..!

இந்த விபத்தில் காருக்குள் இருந்த சோபா (45), ஷோபனா (61) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இறந்த ஷோபனாவின் உடல் சேதமடைந்த காருக்குள் சிக்கி கொண்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நத்தம் தீயணைப்பு படை வீரர்கள் அரை மணி நேரம் போராடி காருக்குள் இருந்து ஷோபனாவின் உடலை மீட்டனர். இறந்தவர்களின் உடலை மீட்ட நத்தம் போலீசார் உடற்கூறாய்விற்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கார் மோதிய வேகத்தில் காரின் முன் பக்க டயர் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு பறந்து சென்று காட்டுக்குள் விழுந்து கிடந்தது. மேலும், நத்தம் துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.