சென்னை: தமிழ்நாட்டில் குளிர்காலம் குறைந்து படிப்படியாக வெப்பம் அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களில் வெப்பம் இயல்பை விட அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 35.2 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 15.5 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஏழு தினங்களுக்கான விடுத்துள்ள வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில், இன்று 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை (7ஆம் தேதி) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
வரும் 8ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல் வரும் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், இன்று 6ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இதையும் படிங்க: 1 லட்சத்துக்கு ரூ. 4 ஆயிரமாம்.. 28 லட்சம் பழைய நோட்டுகளுடன் சிக்கிய இருவர்...போரூர் சம்பவத்தின் பின்னணி என்ன? - OLD 500 AND 1000 NOTES
நாளை 7ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.