ETV Bharat / state

தமிழகத்தில் மது, போதை கலாச்சாரம் பெருகிவிட்டது; பாஜக பிரமுகர் கங்கை அமரன் பகிரங்க குற்றச்சாட்டு! - DRUG CULTURE IN TAMILNADU

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, மது மற்றும் போதை கலாச்சாரம் பெருகி வருகிறது என்று பிரபல திரைப்பட இயக்குநரும், பாஜக பிரமுகருமான கங்கை அமரன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

கங்கை அமரன் பேட்டி
கங்கை அமரன் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2025, 6:17 PM IST

Updated : Jan 2, 2025, 8:53 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை, அம்பேத்கர் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு திரைப்பட இயக்குநரும், பாஜக பிரமுகரமான கங்கை அமரன் வருகை தந்தார். அவரை அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து வரவேற்று அம்பேத்கர் திருவுருவ சிலையை பரிசளித்தார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கடந்த காலங்களில் திரைப்படங்களில் நல்ல கதை இருந்தது. ஆனால் தற்போது வரும் திரைப்படங்களில் கதைக்கு இடமில்லை. அடி, உதை, குத்துக்கு தான் இடம்; மக்கள் அதை நோக்கி சென்றுவிட்டனர்.

கங்கை அமரன் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், தவறுகளை தட்டடிக்கேட்கும் நபராக அவர் மட்டுமே உள்ளார், அவர் முன்எடுத்துள்ள போராட்டங்கள் சரியானதே.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, மது கலாச்சாரம், போதை கலாச்சாரம் பெருகி வருகிறது. போதை கலாச்சாரத்தால் படப்பிடிப்புகள் நடத்தவே இடையூறாக உள்ளது. இந்த விவகாரங்களில் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் பட்டியலின சமூக மக்கள் இன்னும் தலை நிமிர்ந்து நடக்க முடியாத நிலைதான் உள்ளது, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையிலும்கூட பட்டியல் இனமக்களுக்கான முழு உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை.

விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அவரது செயல்பாடுகளை அனைவரும் எதிர்பார்ப்பதை போல் நானும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.

வேங்கைவயல் சம்பவத்தில் குற்றமிழைத்த நபர்களை காவல் துறையும் தமிழக அரசும் நினைத்தால் கைது செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் நினைக்கவில்லை. அரசு இந்த விவகாரத்தை முடிக்க விரும்பவில்லை.

அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசிய பேச்சு முழுமையாக வெளியில் வரவில்லை. ஒரு பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் ஆக்கி வருகின்றனர்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறிய தற்போதைய முதல்வர், ஆட்சிக்கு வந்த பிறகு மௌனமாக இருந்து வருகிறார். மேலும் போதை கலாச்சாரத்தையும் ஒழிப்போம் என்று தற்போது விளம்பரம் செய்து வருகிறார்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம், பாலியல் வன்கொடுமை விவரங்கள், போதை கலாச்சாரம் ஆகியவை பெருகிவரும் வகையில் இந்த அரசு நன்றாக செயல்படுகிறது என்று கங்கை அமரன்

Last Updated : Jan 2, 2025, 8:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.