எனக்கு வந்தா மட்டும் குங்கும சட்னியா.? ரத்த களரி உடன் பெண் குமுறல்.. மருத்துவமனையில் ட்விஸ்ட்..

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 4, 2023, 8:15 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள குங்கும காளியம்மன் கோயில் தெருவில் சின்னகுஞ்சு (38) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் நேற்று (மார்ச் 3) இரவு 9 மணியளவில் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு தலையில் ரத்தத்துடன் சென்றுள்ளார். 

அங்கு தனது பக்கத்து வீட்டுக்காரர்கள் தன்னை தலையில் பலமாக தாக்கி விட்டார்கள் என்றும், அதனால் மண்டை உடைந்து ரத்தம் வழிகிறது உடனடியாக காப்பாற்றுங்கள் என்றும் கதறியுள்ளார். 

இதனையடுத்து உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள், தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக அப்பெண்ணின் தலையை பரிசோதித்துள்ளனர். அப்போது அவரின் தலையில் இருந்து குங்குமம் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், இது தொடர்பாக அருகில் உள்ள வேடசந்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வேடசந்தூர் காவல் துறையினர், அப்பெண்ணிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, பக்கத்து வீட்டுக்காரர்களை பழி வாங்கும் நோக்கத்தில் குங்குமத்தை தலையில் பூசிக்கொண்டு வந்து, ரத்தம் வந்ததாக நடித்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அப்பெண்ணை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனிடையே பெண்ணின் இந்த செயலால், மருத்துவமனை பரபரப்பாக காணப்பட்ட அதே நேரத்தில், சிரிப்பலையும் எழுந்துள்ளது.  

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.