Theni Kumbakkarai falls: மீண்டும் குதூகலமாக மாறிய கும்பக்கரை அருவி.. சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்!

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 8:47 AM IST

தேனி: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர்வரத்து வருகிறது. 

ஆனால் கடந்த மாதம் 30 நாட்களுக்கும் மேலாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முற்றிலுமாக மழை பெய்யாது போனதால், அருவியில் நீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக பெய்த தொடர் கன மழையால் நீர் வரத்து மீண்டும் அதிகரித்து, அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. 

கோடை காலத்தில் அடிக்கும் வெயிலை போன்று வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து காணப்படுவதாலும், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதாலும், கும்பக்கரை அருவிக்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர். வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க ஆர்பரித்து கொட்டும் நீரில் குளித்து சுற்றுலா பயணிள் மகிழ்ந்தனர். 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.