கையில் வாணவேடிக்கை வெடித்த இளைஞர் - வைரலாகும் வீடியோ - நத்தம் மாரியம்மன் கோயில்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நத்தம் மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் நகர் வலம் வந்து பக்தருக்கு காட்சியளிப்பார். அம்மன் நகர்வலம் வரும்போது வழி நெடுகிலும் பக்தர்கள் சாமிக்கு அபிஷேகம் செய்வர்.
அம்மன் நகர்வலம் வரும்போது வெடிகள் வெடிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 24ஆம் தேதி இரவு அம்மன் மயில் வாகனத்தில் மீனாட்சி அலங்காரத்தில் நகர்வலம் வரும்போது நத்தம் - திண்டுக்கல் சாலை மீனாட்சிபுரம் முன்பாக இளைஞர் ஒருவர் கைகளில் வாணவேடிக்கையை வைத்துக்கொண்டு வெடிக்க வைத்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் பார்த்து சென்றனர். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.