கும்பக்கரையில் ஜில்லென ஒரு குளியல் போட்ட சுற்றுலாப்பயணிகள் - லேட்டஸ்ட் நியூஸ் கும்பகரை அருவி
🎬 Watch Now: Feature Video
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி (Theni Kumbakarai Falls) மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதியில் பெய்யும் மழையால் இந்த அருவிக்கு நீர்வரத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் முற்றிலும் மழை இல்லாத காரணத்தால், அருவிக்கு நீர்வரத்து சற்றே குறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஜன.29) விடுமுறை தினம் என்பதாலும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்கு, கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் குறைந்த அளவு நீர் கொட்டிய போதிலும் வெயிலின் தாக்கத்தை தணிக்க அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்தனர்.