Summer vacation: கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்! - tourist place
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி தடுப்பணையில் பவானிசாகர் அணையிலிருந்து வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்ட விவசாய பாசனத்திற்காக திறந்துவிடப்படுகிறது. இதனால் கொடிவேரி அணையில் நீர் அருவி போலக் கொட்டுவதால் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும், இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
தற்போது பள்ளி விடுமுறை தினம் என்பதால் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடுவேரி தடுப்பணையில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பலர் குடும்பம், குடும்பாக வந்து அருவியில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதே போல் வெளி மாநிலங்கள் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
மேலும் பரிசல் பயணம் மேற்கொண்டு பூங்காவில் அமர்ந்து தங்கள் கொண்டு வந்த உணவுகளை உண்டும், கடைகளில் விற்கப்படும் பொறித்த மீன்களின் வாங்கி உண்டும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பொழுதை குடும்பத்துடன் கழித்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துக் காணப்படுவதால், அப்பகுதியில் பங்களாபுதுர் மற்றும் கடத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.