தேனி அல்லிநகரத்தில் அருள்மிகு ஸ்ரீ பேடி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது
🎬 Watch Now: Feature Video
தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ பேடி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிவு பெற்றதை ஒட்டி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக ஆலய வளாகத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாக சாலையில் நெய் வஸ்திரம் பூர்ணாகதி சமர்ப்பிக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது.
இதன் பின்னர், புனித கலச நீர் அடங்கிய கும்பத்திற்கு பூஜைகள் நடத்தப்பட்டு வேதாச்சாரியார்கள் புனித கலச நீரை தலையில் சுமந்து கொண்டு விமான கலசத்தை அடைந்தனர். அதனை தொடர்ந்து, கோபுரத்தில் மேல் ஒற்றை கலசத்திற்கு பூஜைகள் நடத்தி புனித கலச நீரை போற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
அதனை அடுத்து, கலசத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டு, பின்னர் கூடி இருந்த ஏராளமான பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் மூலவரான ஆஞ்சநேயருக்கு புனித கலச நீர் ஊற்றி தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். மேலும், தேனி அல்லிநகரத்தில் அருள்மிகு ஸ்ரீ பேடி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.