அட நல்லாருக்கே..! புதுச்சேரியில் 90'kids விளையாட்டுகளை விளையாடும் நிகழ்ச்சி
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரியில் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஒரு மாத காலத்திற்கு பாரம்பரிய விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இதன் ஒரு பகுதியாக ‘ஸ்ட்ரீட் ப்ளே’ (STREET PLAY) என்ற பெயரில் பாரம்பரிய விளையாட்டுகளை வீதியில் விளையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
இதன் முதல் நிகழ்ச்சி முத்துமாரியம்மன் கோயில் வீதியில் இன்று (மார்ச் 5) நடைபெற்றது. இதில் முக்கியமாக பாண்டி விளையாட்டு, சில்லு விளையாட்டு, பல்லாங்குழி, சுட்டிக்கல் என்கிற தட்டாங்கல், பம்பரம், கண் கட்டி விளையாட்டு, எட்டாம் கோடு, கொல கொலையா முந்திரிக்காய், ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்ததாம், உடைந்த வளையல் விளையாட்டு, சுங்கரக் காய் விளையாட்டு, கோலி போன்ற பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அவரை அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் விளையாடினர்.
மேலும் இதில் பங்கேற்ற சிறுவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டை வயது முதிர்ந்தவர்கள் சொல்லிக் கொடுத்தனர். இதன் காரணமாக முத்துமாரியம்மன் கோயில் வீதியே மகிழ்ச்சி வெள்ளத்தில் நிறைந்து காணப்பட்டது.