ETV Bharat / state

பிரபாகரனின் கொள்கைக்கு எதிராக சீமான் பேசி வருகிறார்! திருமாவளவன் விமர்சனம்! - SEMMAN VS THIRUMA

ஈழத்தமிழர் விவகாரத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் கொள்கைக்கு எதிராக சீமான் பேசி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி விமர்சித்துள்ளார்.

திருமாவளவன் எம்பி பேட்டி
திருமாவளவன் எம்பி பேட்டி (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2025, 1:00 PM IST

சென்னை: பெங்களூரில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை மதித்து தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை கைவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அத்துறையின் அமைச்சரை நேரில் சந்தித்த போது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்ப்ளிப்போம் தமிழ்நாடு அரசினை மீறி எதுவும் செய்யமாட்டோம் என்று சொன்னார். தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை யார் உரிமைக் கோருவது என்பது அல்ல பிரச்சனை. அப்பகுதி மக்களின் வலுவான கோரிக்கை இது. அதற்காக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றபட்டது. அந்த வகையில் மக்களுக்கான வெற்றி. ஆளுநர் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் கலாச்சாரத்திற்கும் மதிப்பளிக்கவில்லை. அவர் ஏற்கனவே உள்வாங்கிய கருத்திற்கு ஏற்ப செயல்படுகிறார். சட்டப்பேரவையை அவமதித்து விட்டு வெளியேறினார். அந்த வகையில் ஆளுநர் தேநீர் விருந்தினை புறக்கணிக்கிறோம்.

பரந்தூர் நிலை வேறு, டங்ஸ்டன் நிலை வேறு, டங்ஸ்டன் அமைக்கவிருந்த இடம் பல்லூயிர் பெருக்க இடம். பரந்தூர் மக்கள் விவசாயத்தை அழிக்கக்கூடாது எங்களை அப்புறப்படுத்தக் கூடாது என்கிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட நிலத்தை சுட்டிக் காட்டி அங்கே அமைக்கலாம் என்கிறார்கள். அதனை நாங்கள் ஆதரிக்கிறோம். பரந்தூருக்கான செயல்திட்டம் செயல்படுத்தப்பட்டதாக நினைக்கிறேன். அந்த வகையில் அது இதற்கு மேல் தடைவிதிக்கப்படாது என நினைக்கிறேன்.

சீமான் சனாதன கும்பலின் செயல்திட்டத்திற்கு செயல்படுகிறார். இவர் போடுகிற பாதை இவருக்கு பயன்படாது. சனாதன சக்திகளுக்கு தான் பயன்படும். இவர் தமிழ் தேசியம் பற்றி பேசலாம். ஆனால் இவர் பெரியார் பற்றி தனிமனித தாக்குதலை நடத்தக் கூடாது . நான் பிரபாகரன் அவர்களுடன் தமிழ்நாட்டு அரசியல் பேசியுள்ளேன். அவர் ஒருபோதும் யாரையும் தவறாக பேசியதில்லை. பெரியாரையும் பேசியதில்லை. இந்திய அரசின் துணை இல்லாமல் ஈழத்தை மீட்டெடுக்க முடியாது என்ற தெளிவு பிரபாகரன் அவர்களுக்கு இருந்தது. ஆனால் தற்பொழுது சீமான் பேசி வருவது பிரபாகரன் கொள்கைக்கு எதிரானது.

இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.