ETV Bharat / sports

ஹாக்கி இந்தியா லீக்: மாஸ்ஸாக அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு டிராகன்ஸ் அணி! - HOCKEY INDIA LEAGUE

ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி ஹைதராபாத் அணியை ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி, முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு டிராகன்ஸ் அணி!
அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு டிராகன்ஸ் அணி! (Hockey India League X)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2025, 12:20 PM IST

சென்னை: ஒடிசாவில் நடைபெற்ற 'ஹாக்கி இந்தியா லீக்' தொடரில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி ஹைதராபாத் அணியை ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய நிலையில் அரையிறுதி போட்டிக்கு தேர்வாகும் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.

8 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஹாக்கி இந்தியா லீக் தொடர் ஒடிசா மற்றும் ராஞ்சியில் களைகட்டி வருகின்றது. இதில் ஒடிசாவின் ரூர்கேலாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நேற்று (ஜன.23) தமிழ்நாடு டிராகன்ஸ் அணியும் - ஹைதராபாத் அணியும் விளையாடின.

பதிலடி கொடுத்த தமிழ்நாடு டிராகன்ஸ்: இந்த போட்டியில் கடந்த லீக் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய நிலையில் ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் ஹைதராபாத் அணி வீரர் டிம் ப்ராண்டு (Tim brand) கோல் அடிக்க, பதிலுக்கு அடுத்த நிமிடத்திலேயே தமிழ்நாடு அணி வீரர் ப்ளேக் கோவர்ஸ் (Blake govers) கோல் அடித்து அசத்தினார்.

அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு டிராகன்ஸ் அணி!
அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு டிராகன்ஸ் அணி! (Hockey India League X)

விறுவிறுப்பான விளையாட்டு களம்: இதனால், முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. அடுத்து 3வது கால் பாதியில் 37வது நிமிடத்தில் தமிழ்நாடு அணி வீர்ர் ஜிப் ஜான்சென் (jip janssen) பெனால்டி கார்னர் கோல் அடிக்க ஆட்டம் தமிழ்நாடு பக்கம் திரும்பியது. இருப்பினும் ஆட்ட நேர முடிவின் 59வது நிமிடத்தில் ஹைதராபாத் அணி வீரர் மைக்கோ கேசெல்லா (Maico Casella) கோல் அடிக்க, ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இதையும் படிங்க: என்னா அடி..! குருவின் சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா... கதி கலங்கிய இங்கிலாந்து...!

ஷூட் அவுட் முறையில் வென்ற தமிழ்நாடு அணி: இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அபாரமாக விளையாடிய தமிழ்நாடு அணி வீரர்கள் 4-3 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, அசத்தல் வெற்றியை பதிவு செய்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. கடந்த இரண்டு ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்ற இந்திய அணியில் தமிழ்நாடு வீரர்கள் இல்லை என்ற குறையை தீர்க்கும் வகையில் இந்த வெற்றி பார்க்கப்படுகிறது.

இது குறித்து பேசிய இந்திய ஹாக்கி வீரர் கார்த்தி, “இந்த வெற்றியின் மூலம் 8 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 17 புள்ளிகளுடன் மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியதோடு முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது. இந்த வெற்றி அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் இந்திய அணியில் தமிழக வீரரை இடம்பிடிக்க வைக்கும் என நம்புகிறேன்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.