'திரை தீ பிடிக்கும்... இது விஜய்க்கு இல்லமா... மெய்யாலுமே சூர்யாவுக்கு' - அப்படி என்னாவாம்! - புதுச்சேரி ஜெயா தியேட்டரில் தீ
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் 15 திரையரங்கிலும் கமல், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டோர் நடித்த 'விக்ரம்' படம் திரையிடப்பட்டுள்ளது. படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை. இந்நிலையில் நேற்று காலாப்பட்டு பகுதியில் உள்ள ஜெயா திரையரங்கில் இரவு 9.30 மணியளவில் படம் முடியும் நேரத்தில், சூர்யா தோன்றும் காட்சியில் திரை திடீரென தீப்பற்றியது. இதனைக் கண்ட ரசிகர்கள் அலறி அடித்து வெளியில் ஓடினர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பாதுகாப்புக்கருதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இரவு காட்சி ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST