சென்னை: ’லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகம் எம்புரான் (Empuraan) படத்தின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘லூசிபர்’. இந்த படம் மாஸ் கமர்ஷியலாக மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
இந்நிலையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகம் எம்புரான் திரைப்படம் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டது. வரும் மார்ச் 27ஆம் தேதி ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் எம்புரான் படத்தின் டீசர் நேற்று வெளியிட்டப்பட்டது. எம்புரான் படத்தின் டீசரை பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி வெளியிட்டார். எம்புரான் படத்தை தமிழில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்நிலையில் எம்புரான் படத்தின் டீசர் வரவேற்பை பெற்று வருகிறது. 'நான் இல்லை என்றால் உனக்கு உதவி செய்ய ஒரே ஒருவர் தான் இருப்பார், அது ஸ்டீஃபன்’ என்ற வசனத்துடன் ஸ்லோ மோஷன் காட்சிகளுடன் டீசர் தொடங்குகிறது. இது தீமைக்கும், தீமைக்கும் ஆன டீல் என மோகன்லால் மாஸ் வசனத்துடன் அறிமுகமாகிறார். டீசரின் இறுதியில் பிருத்விராஜ் தோன்றுகிறார்.
எம்புரான் டீசர் வைரலாகி வரும் நிலையில், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இதனிடையே எம்புரான் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பிருத்விராஜ், “நடிகர் மோகன்லாலுக்கு நன்றி தெரிவித்தார். இப்படம் பல நாடுகளில் படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பு பருவநிலை மாற்றத்தால் தள்ளிப்போனது. அப்போது சிரமங்களை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளித்த மோகன்லால் சாருக்கு நன்றி” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேன்... அநாகரிகமாக பேசியதற்கு விளக்கம் கொடுத்த மிஷ்கின் - MYSSKIN SORRY ABOUT HIS SPEECH
" lyca offered me an opportunity to direct #Rajinikanth sir. This opportunity was so good for a new director like me. They wanted the project to take off at a particular timeline, but I couldn't come up with a subject for #Rajinikanth sir"
— AmuthaBharathi (@CinemaWithAB) January 26, 2025
- #Prithviraj pic.twitter.com/ChphJSrwiv
இதனைத் தொடர்ந்து பிருத்விராஜ் பேசுகையில், "எனக்கு லைகா தயாரிப்பு நிறுவனம் மூலம் நடிகர் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. என்னை போன்ற புதிய இயக்குநர்கள் அது சிறந்த வாய்ப்பு, நானும் ஒரு நல்ல கதையை இயக்க முயற்சி செய்தேன். ஆனால் எனக்கு வழங்கப்பட்ட குறுகிய காலத்தில் ரஜினி சாருக்கு கதை தயார் செய்ய முடியவில்லை” என்றார்.
இந்த டீசர் வெளியீட்டு விழாவில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள ’விடாமுயற்சி’ பட இயக்குநர் மகிழ் திருமேனி பங்கேற்றார். இயக்குநர் மகிழ் திருமேனியை பாராட்டிய பிருத்விராஜ், சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் பார்த்தேன் எனவும், தமிழ் சினிமாவில் சமீபத்தில் பார்த்த டிரெய்லர்களில் அற்புதமான ஒன்றாக இருந்தது எனவும் கூறினார்.