வீடியோ: திருச்சியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி.. 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.. - உலக சிலம்பம் இளைஞர் சம்மேளனத்தின் தலைவர்
🎬 Watch Now: Feature Video
திருச்சியில் உலக சிலம்பம் இளைஞர் சம்மேளனம் சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி தில்லை நகர் கி.ஆ.பெ விஸ்வநாதம் மேல் நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆனந்த் போட்டியை தொடங்கி வைத்தார். ஒற்றை கம்பு சிலம்பம் போட்டி, இரட்டை கம்பு சிலம்பம் போட்டி, வாள் வீச்சு, மான்கொம்பு சுற்றுதல், குழு போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.
மழலையர், ஜூனியர், சீனியர் உள்பட 5 பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் திருச்சி, மதுரை, சேலம், சிவகங்கை, தஞ்சை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.