சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் அதிநவீன லேப்ராஸ்கோபி பயிற்சி முகாம்..! - salem government hospital news
🎬 Watch Now: Feature Video
Published : Sep 13, 2023, 4:09 PM IST
சேலம்: குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (Mohan Kumaramangalam Medical College) குடல் அறுவை சிகிச்சை துறை மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் கல்வியியல் நிறுவனம் (Johnson & Johnson Institute) சார்பில், இன்று மற்றும் நாளை (செப்.13,14) என இரண்டு நாட்கள் லேப்ராஸ்கோபி (laproscopy) திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று தொடங்கிய முகாமை மருத்துவக் கல்லூரி முதல்வர் மணி தொடங்கி வைத்தார். மேலும் இப்பயிற்சி முகாமிற்காக சொகுசு பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன அறுவை சிகிச்சை பயிற்சி உபகரணங்கள் மூலம் பொது அறுவை சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சை குறித்து உதவி பேராசிரியர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு லேப்ராஸ்கோபி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சேலம் அரசு மருத்துக் கல்லூரி முதல்வர் மணி, இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த முகாமில் லேப்ராஸ்கோபி சிகிச்சை குறித்து பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் மாநில அளவில் குடல், இரைப்பை, கல்லீரல் போன்ற அறுவை சிகிச்சை துறையில் சேலம் அரசு மருத்துவமனை மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.