தூத்துக்குடியில் ஏப்ரல் 21 முதல் மே 1 வரை புத்தக திருவிழா - கனிமொழி எம்பி - kanimozhi MP speech
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி மாவட்ட இலக்கிய கலை மற்றும் இசை சங்கத்தின் உறுப்பினர்களுக்கான பொதுக்குழு கூட்டம், இன்று (மார்ச் 4) மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த கூட்டத்திற்குப் பின் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தூத்துக்குடியில், வருகிற ஏப்ரல் 21 முதல் மே 1 வரை 4ஆவது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் கடைசி 4 நாள்கள் நெய்தல் விழா நடத்தப்பட உள்ளது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த கலை, நிலம், வாழ்வு ஆகியவற்றைச் சேர்ந்த புகைப்பட கண்காட்சியும் வைக்கப்பட இருக்கிறது. கோவில்பட்டியில், கிரா நினைவு இலக்கிய கலை இசை அரங்கம் தயாராக உள்ளது. அங்கு இசை நிகழ்ச்சிகளை நடத்த முன் வரலாம். தூத்துக்குடியில் முதல் முறையாக கலை இலக்கிய சங்கம் ஒன்று உருவாக்கப்பட இருக்கிறது’ என தெரிவித்தார்.