கோவையில் பெட்டிக்கடையில் வைத்து சட்டவிரோதமாக மது மற்றும் போதை பொருட்கள் விற்பனை! - போதை பொருட்கள்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: சூலூர் அருகே செலம்பராயம் பாளையம் பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து மதுபானங்கள் மற்றும் போதை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ள அப்பகுதி மக்கள், இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “ஆறுமுகம் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருவதாகவும், அங்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர்.
அவர் மட்டுமின்றி அங்கு ஜோதிமணி, சதீஷ், ஆகிய இருவரும் சட்டவிரோதமாக வீடுகளில் வைத்தே மது விற்பனையில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். காவல்துறையினர் ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளனர். மேலும், இவர்கள் பண பலத்தைக் கொண்டு இந்த செயலில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், மது விற்பனை நடைபெறுவதால் மது அருந்துவோர் அங்கேயே இருப்பதாகவும், சில சமயங்களில் வாக்குவாதம் மற்றும் தகராறுகள் ஏற்படுவதாகவும், இதனால் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும், பாதுகாப்பற்ற சூழ்நிலையாகவும் இருப்பதாக” தெரிவித்து உள்ளனர்.