வீடியோ: இந்து, முஸ்லிம், கிறிஸ்துவரென மூன்று மதத்தினரும் பங்கேற்ற பள்ளிவாசல் திறப்பு விழா - சீரெடுத்துச் சென்ற அனைத்து சமுதாய மக்கள்
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை மாவட்டம் காமராஜபுரத்தில் உள்ள மஸ்ஜித் முஹம்மது இப்ராஹீம் ஜும்ஆ பள்ளிவாசல் திறக்கப்பட்டது. இந்த பள்ளிவாசல் திறப்பிற்கு மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என அனைத்து மதத்தினரும் ஒன்றாக இணைந்து சமத்துவமாக சீர் எடுத்து ஊர்வலமாக சென்றனர். புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட காமராஜபுரம் 9ஆம் வீதியில் உள்ள மஸ்ஜித் முஹம்மது இப்ராஹீம் ஜும்ஆ பள்ளிவாசல் பழமையானது.
இந்தப் பள்ளிவாசல் கடந்த சில ஆண்டுகளாக புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிவாசல் திறப்பை முன்னிட்டு பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும், அனைத்து சமுதாய மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிவாசல் திறப்புக்கு அனைத்து கட்சி பிரமுகர்களும் வருகை தந்து சிறப்பித்தனர். அதேபோல இந்து மதத்தைச் சேர்ந்த குருக்கள், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஹஜரத் என இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என மூன்று மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து சமத்துவமாக பல்வேறு வகையான பொருட்களை சீராக எடுத்துச் சென்றனர்.