"ஒவ்வொரு தடவையும் இதே வேலையா போச்சு... விழுந்தா என்ன பண்ணுவீங்க": பிடிஓ-வை ரெய்டு விட்ட ஆட்சியர்! - மேல்மாந்தையில் மாவட்ட ஆட்சியர்
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு விழா தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பயணியர் நிழற்குடையில் சாய்வு தளம் முறையற்ற வகையில் பாதுகாப்பின்றி அமைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அருகில் இருந்த விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமாரை அழைத்து "இதுல இருந்து பொதுமக்கள் கீழே விழுந்தால் என்ன பண்ணுவீங்க... ஒவ்வொரு தடவையும் இதே வேலையா போச்சு இதை கவனிக்காமல் என்ன வேலை செய்கிறீர்கள்" என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்த பயணியர் நிழற்குடை கட்டித் தர ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்தக்காரர் பாண்டியராஜ் என்பவரிடம், "இதை மாற்றி கட்டித்தந்து போட்டோ அனுப்பினால் தான் இதற்கான பணத்தை கொடுப்பேன்" என்றும் உடனடியாக இதை மாற்றிக் கட்டும்படியும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் இச்செயலைப் பார்த்த அப்பகுதி மக்கள் பாராட்டினர்.