ETV Bharat / spiritual

பழனி தைப்பூசம் பக்தர்களுக்கு 3 நாட்கள் இலவச தரிசனம்! - THAI POOSAM

பழனி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 3 நாட்கள் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு பேட்டி
அமைச்சர் சேகர்பாபு பேட்டி (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2025, 4:54 PM IST

பழனி: அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வருகிற பிப்ரவரி 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற உள்ளது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அனைத்து அரசு துறைகள் ஒருங்கிணைப்பு கூட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது :

கடந்த ஆண்டு 12 லட்சம் பக்தர்கள் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு அதை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்போடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பூசத் திருவிழா நடைபெறும் பத்து நாட்களில் நான்கு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்னதானம் செய்ய உணவுத்துறை அனுமதி வாங்க வேண்டும். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு கட்டணம் இல்லாமல் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். பக்தர்கள் வருகையை முன்னிட்டு பழனியில் செயல்படும் தங்கும் விடுதிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்காணித்து முறைப்படி ஆலோசனை நடத்தி முடிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தி உள்ளோம். பக்தர்களின் வருகையைப் பொருத்து போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்து முடிவு செய்யப்படும். தைப்பூசத் திருவிழா காலங்களில் பழனி நகரில் இலவச போக்குவரத்து செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

மேலும், திருப்பரங்குன்றம் கோயிலில் 50 சென்ட் இடம் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானது என்று வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, 1930 ஆம் ஆண்டு லண்டன் பிரிவியூ கவுன்சில் தெரிவித்துள்ளபடியும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பு குறித்தும் நடுநிலையோடு அரசு செயல்பட்டு வருகிறது என்றார். "கேள்விகள் கேட்பதும், அதற்கு பதில் சொல்வதும் சுலபம். ஆனால் அமைச்சர் என்ற முறையில் நான் சொல்லக் கூடிய வார்த்தை ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதி மத மோதல்களை தவிர்க்கும் வகையிலேயே பேசுகிறேன்" என்றும் அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப், சார் ஆட்சியர் கிஷன்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.