ETV Bharat / state

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு...போலீசுக்கு எதிரான உயர் நீதிமன்ற கருத்துகளுக்கு தடை! - ANNA UNIVERSITY CASE

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் எஃப்ஐஆர் வெளியானதற்கு எதிராக காவல்துறையினர் மீது துறைரீதியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் (Image Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2025, 4:42 PM IST

புதுடெல்லி: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) வெளியான நிலையில் அதற்கு பொறுப்பேற்று தமிழ்நாடு காவல்துறையினர் மீது துறைரீதியாக விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மேல்முறைடு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், "காவல்துறை அதிகாரிகள் தரப்பில் பல்வேறு கவனக்குறைவு நேரிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தவறாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த இரண்டு நாட்களில் அது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் பொதுவெளியில் செய்தியாளர்களிடம் முக்கியமான சில தகவல்களை கூறியது குறித்த நீதிமன்ற விமர்சனமும் தேவையில்லாத ஒன்றாகும்.

இணையதளத்தின் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே எஃப்ஐஆர் வெளியானது. அது குறித்து தேசிய தகவல் மையம் அனுப்பிய மின்னஞ்சலையும் உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. தேசிய தகவல் மையம் மேற்கொண்ட விசாரணையில்,தொடர்புடைய வழக்கின் எஃப்ஐஆரை பதிவிறக்கம் செய்வதில் இருந்து தடுப்பதற்கான தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து மின்னஞ்சலிலும் தேசிய தகவல் மையம் சார்பில் மாநில குற்ற ஆவண காப்பகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் சிலரால் எஃப்ஐஆரை பார்க்க முடிந்திருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு காவல்துறை
அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு காவல்துறை (Image Credits - ETV Bharat Tamil Nadu)

பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் அமைத்துள்ள மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அல்லது பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியதற்கும் தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தெரிவித்த சில கருத்துகள் அடங்கிய குறிப்புகள், செய்தியாளர் சந்திப்பு குறித்து உயர் நீதிமன்றம் கூறிய கருத்துக்கு மட்டும் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டிருந்தது.

விமர்சனங்களுக்கு தடை: இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, சித்தார்த் லுத்ரா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதனைத் தொடர்ந்து எஃப்ஐஆர் வெளியானது தொடர்பாக காவல்துறையினருக்கு எதிராக உயர் நீதிமன்றம் கூறிய விமர்சனங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

கைது செய்யப்பட்ட ஞானசேகரன்
கைது செய்யப்பட்ட ஞானசேகரன் (Image Credits - ETV Bharat Tamil Nadu)

விசாரணையின் போது, தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு அமைத்ததற்காக கோபப்படுகிறீர்களா?" என்று கேட்டனர். அதற்கு ரோஹத்கி, "இல்லை, நான் பாதிக்கப்பட்ட தரப்புக்கே ஆதரவு தெரிவிக்கின்றேன். சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பாதுகாப்புக்கு எதிராக நான் கோபப்படவில்லை. இந்த வழக்கில் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம் முன்வைத்த சில கருத்துகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றுதான் கேட்கின்றேன்,"என்றார்.

தமிழ்நாடு அரசின் வாதம்: "எஃப்ஐஆர் வெளியானதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் வெளியாகி உள்ளதா? அதனை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?" என நீதிபதி நாகரத்தினா கேள்வி எழுப்பினார். இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட எஃப்ஐஆரை முதல் நாளில் இருந்தே யாரும் பார்க்க இயலாதபடி தடுத்து வைத்திருந்தோம். ஆனால், இரண்டாம் நாளில் தான் அது வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாநில அரசு எடுத்து வைத்த வாதத்தை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

குறிப்பாக மூத்த வழக்கறிஞர் லுத்ரா எடுத்து வைத்த வாதத்தில், "இணையதளத்தில் கோளாறு ஏற்பட்டது என்பது மாநில அரசின் தவறு அல்ல. மத்திய அரசின் அமைப்பில் ஏற்பட்ட தவறுதான் காரணம். எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக இரண்டாவது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது அனைத்து இணையதள இணைப்புகளும் தடுக்கப்பட்டுள்ளன. ஒருவேளை அதையும் மீறி வெளி வந்தால் அவற்றையும் தடுப்போம்,"என்று கூறினார்.

ஆளும் கட்சி உறுப்பினர்: பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், "மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒரே ஒரு நபர் மீது தான் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் வேறு விசாரணை மேற்கொள்வதற்கு ஒன்றும் இல்லை என்று சென்னை காவல்துறை ஆணையர் கூறியிருக்கிறார். இந்த வழக்கில் வேறு யார் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்று சொல்லவில்லை. விசாரணை முடிவடைந்து விட்டதாகச் சொல்கிறார்.

இது மூடி மறைக்கும் முயற்சியாகும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர். அடிக்கடி பல்கலைக்கழகத்துக்குள் வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவரால் மேலும் சில பெண்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம், குற்றம் சாட்டப்பட்டவர் ஆளும் கட்சியில் உறுப்பினராக உள்ளார். எனவே அவர் பாதுகாக்கப்படுகிறார். எனவே, இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி நாகரத்தினா, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டதற்கு தமிழ்நாடு அரசு ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை,"" என்று பதில் அளித்தார்.

உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில் 29ஆவது பத்தியில் 9ஆவது குறிப்பில், "எஃப்ஐஆர் வெளியானது குறித்த துறைரீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டும். தவறிழைத்தவர்கள் மீது துறைரீதியிலான ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தொடர்புடைய சேவை விதிகளின் கீழ் கடமையில் அலட்சியமாக இருந்தது மற்றும் பணியில் தவறிழைத்ததற்காக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் இப்போது தடை விதித்திருக்கிறது.

வாதங்கள் சமர்பிக்கப்பட்ட பின்னர், தமிழ்நாடு அரசின் மனு மீது பதில் அளிக்கும் படி தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.