ETV Bharat / state

சீர்காழி லட்சுமி... 15 ஆண்டுகளில் 4 திருமணங்கள்...2-வது கணவன் கொடுத்த புகாரில் சிக்கி சிறை! - MARRIED WOMAN CHEATING

சீர்காழி அருகே 4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவர் என ஏமாற்றியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

லட்சுமி என்ற நிஷாந்தி
லட்சுமி என்ற நிஷாந்தி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2025, 4:59 PM IST

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை ஊராட்சிக்கு உட்பட்ட குளங்கரை தெருவைச் சேர்ந்தவர் சிவசந்திரன் (30). இவர் தனியார் வங்கியில் குழு கடன் வசூல் செய்யும் பணியில் இருந்து வருகிறார். இந்நிலையில், சிவசந்திரனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தாயை பார்த்துக் கொள்ள அவ்வப்போது சிவசந்திரன் மருத்துவமனைக்கு சென்று வந்தார். அப்போது, நிஷாந்தி (29) என்பவர் தான் எம்பிபிஎஸ்., எம்எஸ் படித்து விட்டு மருத்துவராக இதே மருத்துவமனையில் வேலை பார்த்து வருவதாக தன்னை அறிமுகம் செய்து கொண்டார். தொடர்ந்து இருவரும் பழக தொடங்கியுள்ளனர்.

அதிர்ந்துபோன இரண்டாவது கணவன்

இதனைத் தொடர்ந்து கடந்த 20-ம் தேதி சீர்காழியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆடம்பரமாக சிவசந்திரனுக்கும், நிஷாந்திக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்தது. இதைக் கண்ட சீர்காழி அருகே புத்தூர் வாய்க்காங்கரை தெருவை சேர்ந்த நெப்போலியன் (வயது 34) என்பவர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரில், ''கடந்த 2017 ஆம் ஆண்டு தனது பெயர் மீரா (நிஷாந்தி) என்றும் தான் அரசு வேலை செய்து வருவதாகவும் கூறியதன் பெயரில் அவரை காதலித்து நான் திருமணம் செய்து கொண்டேன். அதனை தொடர்ந்து நாங்கள் இருவரும் கடலூர், சிதம்பரம், சென்னை ஆகிய ஊர்களில் வசித்து வந்தோம்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னையில் வசித்து வந்த போது ஒன்றும் சொல்லாமல் என்னை விட்டு சென்று விட்டார். அதன் பிறகு அவரை நான் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் மீரா, சீர்காழி சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதனைத் தொடர்ந்து தன்னை ஏமாற்றிய மீரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென'' சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் செல்வி, உதவி காவல் ஆய்வாளர் புஷ்பலதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து லட்சுமி என்ற நிஷாந்தியை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

முதல் கணவன் மரணம்

அதன்படி, கொடியம்பாளையம் தீவு கிராமத்தை சேர்ந்த லட்சுமிக்கு (கைதான பெண்) பழையார் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவருடன் முறைப்படி கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், இவரது கணவர் இறந்து விட்டதால் பெண் குழந்தையை இறந்து போன கணவரின் அண்ணன் ஜெயக்குமார் பராமரிப்பில் விட்டு விட்டு ஆண் குழந்தையை கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் உள்ள அம்மா வீட்டிற்கு அழைத்து வந்து வசித்து வந்துள்ளார்.

12 ஆம் வகுப்பு முடித்தவர்

பின்னர் தனது பெயரை மாற்றிக் கொண்டு 2017 ஆம் ஆண்டு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நெப்போலியனை திருமணம் செய்து விட்டு 2021 ஆம் ஆண்டு தலைமறைவாகியுள்ளார். பின்னர் மீண்டும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோல்டன் நகரை சேர்ந்த ராஜா என்பவரை சந்தித்து மருத்துவராக பணிபுரிவதாக கூறி திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார். சில காலம் கழித்து தன்னை கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பணி மாற்றி விட்டதாக கூறி தலைமறைவாகி உள்ளார். இதை போல் இவர் ஈரோடு மாவட்டத்திலும் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீர்காழி போலீசார் பல பேரை பல பெயர்களில் கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட லட்சுமியை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் சீர்காழியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 12 ம் வகுப்பு மட்டுமே படித்த லட்சுமி மருத்துவர் என பல ஆண்களை ஏமாற்றி கைதாகி சிறைக்கு சென்றுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.