தேனியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்! - தேனி செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18399621-thumbnail-16x9-scam.jpg)
தேனி: தேனி அல்லிநகரம் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், இன்று(மே.2) மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது. முதலில் வரதராஜ பெருமாள் மீனாட்சி அம்மனுக்குச் சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. பின்னர் புனித கலச நீர் அடங்கிய கும்பத்திற்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்குப் பச்சை நிற வண்ண பட்டு உடுத்தி, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
அதன் பின்னர் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேஸ்வரருக்குச் சிறப்புத் தீபாராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கூடி இருந்த பொதுமக்கள் மீது பூ பந்து வீசும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு களித்து, சாமி தரிசனம் செய்தனர்.
TAGGED:
Meenakshi Sundareswarar