கையில் கட்சிக்கொடியுடன் குத்தாட்டம் போட்ட நெல்லை காங்கிரஸ் தலைவர் - ஈரோடு செய்திகள்
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலைபெற்று வெற்றி முகத்திலுள்ளார். இதை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நெல்லையில் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் வண்ணாரப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக காங்கிரஸ் அலுவலகம் முன்பு அமைந்துள்ள காமராஜர் மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் சிலைகளுக்கு மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து டிரம்ஸ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது உற்சாக மிகுதியில் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கையில் கட்சிக் கொடியுடன் குத்தாட்டம் போட்டபடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ‘திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி’ -முதலமைச்சர் பூரிப்பு