ETV Bharat / entertainment

”கதையில சாவுனு வந்தாலே என் பெயரை எழுதிடுறாங்க” - ஆதங்கத்தை கொட்டிய கலையரசன்! - KALAIYARASAN MADRASKARAN

என்னை எப்போதும் செகண்ட் ஹீரோவாகவே பார்க்கிறார்கள்... அதனால் இனிமேல் ஹீரோவாக நடிக்க போகிறேன் என மெட்ராஸ்காரன் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் கலையரசன் கூறியுள்ளார்.

மெட்ராஸ்காரன் பட நிகழ்வில் வருத்தப்பட்ட கலையரசன்
மெட்ராஸ்காரன் பட நிகழ்வில் வருத்தப்பட்ட கலையரசன் (Credits: SR productions X page, IANS)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 7, 2025, 5:28 PM IST

Updated : 23 hours ago

சென்னை: எஸ் ஆர் புரொடக்ஷன் சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம் தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் ’மெட்ராஸ்காரன்’. இப்படத்தில் கலையரசன், நிஹாரிகா, கருணாஸ், ஐஸ்வர்யா தத்தா உட்பட பலர் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரலைர் வெளியீட்டு நிகழ்ச்சியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் கலையரசன். நிகழ்வில் பேசிய அவர், “இனிமேல் நான் துணை கதாபாத்திரங்களில் அதிகமாக நடிக்கப் போவதில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால் இந்த துறையில் நான் ஆரோக்கியமாக இல்லை என நினைக்கிறேன். நான் நடித்த ஒரு துணை கதாபாத்திரம் தான் இன்றுவரை எனக்கு சோறு போடுகிறது. அதை நான் மறக்கவே மாட்டேன்.

மலையாள சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் பெரிய படத்தில் சிறிய கதாபாத்திரங்கள் நடித்திருப்பார்கள். வில்லனாகவும் நடித்திருப்பார்கள். ஆனால் அவர்களை ஹீரோவாக வைத்து இரண்டு, மூன்று படங்கள் வெளியாகும். இங்கேயும் அந்த சூழல் இருக்கிறது. இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் குறைவாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இங்கு ஒரு நடிகர் வில்லனாக நடித்தால், தொடர்ந்து வில்லனாகவே தான் நடிக்க அழைப்பார்கள். துணை கதாபாத்திரங்களில் நடித்தால், தொடர்ந்து அதே மாதிரியான கதாபாத்திரங்களில்தான் நடிக்க அழைக்கிறார்கள்.

கதை எழுதுவதற்கு முன்பே சாவுனு வந்தால் என் பெயரை எழுதிவிடுவார்கள் என நினைக்கிறேன். அது பிரச்சனையாகவே உள்ளது. பெரிய ஹீரோ படங்கள் மட்டுமின்றி புதுமுக ஹீரோவாக இருந்தாலும் கூட அந்த படத்திலும் துணை கதாபாத்திரங்களுக்கே அழைக்கிறார்கள். அதனால் இனிமேல் கதைக்கு தேவையான மிக முக்கியமான கதாபாத்திரங்கள் வந்தால் மட்டுமே அதில் நடிப்பேன். மற்றபடி கதையின் நாயகனாவே இனிமேல் நடிக்க முடிவு எடுத்திருக்கிறேன்”, என தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்வில் கலையரசன், “பொங்கலுக்கு மெட்ராஸ்காரன் மட்டுமல்ல நிறைய படங்கள் வருகிறது. ஒரு பெரிய படம் வரவில்லை என்பதால் நிறைய படங்கள் வருவது என்பது இப்போதைக்கு சரியாக இருக்கிறது. ஆனால் முன்பெல்லாம் பண்டிகைகளுக்கு பெரிய படங்கள் வந்தால் கூடவே சின்ன பட்ஜெட் படங்களும் வரும்.

அந்த படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் சின்ன பட்ஜெட் படங்களுக்கு செல்வார்கள். அதன்மூலம் அந்த படத்திற்கான வரவேற்பு கிடைக்கும். பெரிய ஸ்டார்களின் படம் எப்போது வந்தாலும் அது அவர்களுக்கான வரவேற்பை தரும். அதுகூடவே நாலைந்து சின்ன பட்ஜெட் படங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருந்தால் நன்றாக இருக்கும்.

இதையும் படிங்க: அமீர்கான் தயாரிப்பில் இந்தியில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்!

இதனை சினிமாவில் இருக்கக்கூடிய தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம் என அனைவருமே சேர்ந்து பேசி ஒற்றுமையாக முடிவெடுக்க வேண்டும். விடாமுயற்சி வராதது எனக்குமே வருத்தமாகத்தான் இருக்கிறது. எனக்கும் அஜித் சாரை மிகவும் பிடிக்கும்.

நிறைய சின்ன பட்ஜெட் படங்கள் விடாமுயற்சி வரவில்லை என தெரிஞ்சதும் இன்னும் வேகமாக தங்களது பணிகளை செய்து கொண்டிருப்பார்கள். ஒரு படமே மொத்த படங்களின் இடத்தை எடுத்துக் கொண்டு போய் விடாமல் இன்னும் முறைப்படுத்தப்பட வேண்டும். சின்ன பட்ஜெட் படங்கள் மூலமாகத்தான் சினிமாவை நேசிக்கக்கூடிய கலைஞர்கள் அதிகமாக வர முடியும்”, என்றும் பேசியுள்ளார்.

Last Updated : 23 hours ago
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.