ETV Bharat / health

உடல் எடையை குறைக்க உதவும் பச்சை பட்டாணி..மற்ற நன்மைகளையும் தெரிஞ்சிக்கோங்க! - GREEN PEAS BENEFITS

வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை வேகவைத்த பட்டாணியை சாப்பிட்டு வர, சருமம் பராமரிக்கப்படுவதோடு, உடல் எடையில் நல்ல மாற்றம் இருக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)
author img

By ETV Bharat Health Team

Published : Jan 7, 2025, 5:16 PM IST

ஃபேபேசியன் எனும் தாவர குடும்பத்தை சேர்ந்தது தான் பச்சை பட்டாணி. துருக்கி மற்றும் ஈராக்கில் மட்டும் அதிகம் சாகுப்படி செய்யப்பட்ட பச்சை பட்டாணி தற்போது உலகமெங்கும் பயிரிடப்பட்டு விளைவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, குளிர்காலத்தில் பச்சை பட்டாணி அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும் பச்சை பட்டாணியை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? உடல் எடை இழப்பிற்கு பச்சை பட்டாணி எவ்வாறு உதவுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பச்சை பட்டாணி தரும் நன்மைகள்:

  1. செரிமானத்தை மேம்படுத்துகிறது
  2. இரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது
  3. கண் பார்வை மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
  4. கர்ப்பிணிப் பெண் மற்றும் கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது
  5. இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இரத்த சோகையை தடுக்கிறது
  6. பச்சை பட்டாணியில் பாஸ்பரஸ் சத்து அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. வெண்டைக்காயை விட மூன்று மடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சை பட்டாணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது
  7. பட்டாணியில் பாலிபினால்கள் உள்ளன, அவை ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆன்டிகார்சினோஜெனிக் செயல்பாட்டைக் கொண்டிருப்பதாக NCBI தெரிவித்துள்ளது.
  8. பச்சை பட்டாணியில் உள்ள சபோனின், புற்றுநோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

உடல் எடையை குறைக்க பச்சை பட்டாணி:

புரதம் மற்றும் நார்ச்சத்து: பச்சை பட்டாணியில் உள்ள புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. வாரத்திற்கு மூன்று முறை வேகவைத்த பச்சை பட்டாணி சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை குறைகிறது. அரை கப் பச்சைப் பட்டாணியில் 5 கிராம் புரதம் உள்ளது.

குறைவான கலோரி: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பட்டாணி சிறந்த தேர்வாக இருக்கிறது. இதில் குறைவான கலோரிகள் இருப்பதால் உடல் எடை குறைக்கவும், எடையை பராமரிக்கவும் உதவியாக இருக்கிறது.

சத்துக்கள்: வைட்டமின் ஏ, சி, கே மற்றும் மெக்னீசியம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாதுக்களால் பச்சை பட்டாணி நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பச்சை பட்டாணியில் உள்ள பீட்டா குலுக்கன், உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. கூடுதலாக, உடலில் படிந்துள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவியாக இருக்கிறது.

பச்சைப் பட்டாணியை எந்தெந்த வகையில் உணவில் சேர்க்கலாம்:

  • அனைத்து வகையான காய்கறி சாலட்களிலும் பட்டை பட்டாணியைச் சேர்த்து உட்கொள்ளலாம்
  • பச்சைப் பட்டாணியைச் வேக வைத்து சாப்பிடலாம்
  • 8 மணி நேர ஊற வைத்த பச்சை பட்டாணியை காலையில் உட்கொள்ளலாம்
  • சப்பாத்தி, இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு கிரேவியாக தயாரிக்கலாம்
  • வெஜிட்டபிள் பிரியாணி, மட்டன் சுக்கா போன்றவற்றிலும் பச்சைப் பட்டாணி சேர்க்கலாம்.

இதையும் படிங்க:

பைல்ஸ் முதல் உடல் எடை வரை கோவக்காயில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்!

இரும்புச்சத்து அதிகரிக்க வாரத்திற்கு 2 முறை இந்த காய் சாப்பிடுங்க..பலன்கள் ஏராளம்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.