காலையில் எழுந்ததும் காபியுடன் நாளை தொடங்கவில்லை என்றால் பலருக்கும் நாளே ஓடாது. இப்படியிருக்க, கர்ப்ப காலத்தில் பெண்கள் காபி குடிக்க கூடாது என பல விவாதங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், பெண்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய காலக்கட்டமான கர்ப்ப காலத்தில் காபி குடிக்கலாமா? கர்ப்பிணிகள் காபி குடித்தால் கருவில் உள்ள குழந்தையை பாதிக்குமா? போன்ற கேள்விகளுக்கு ஆய்வுகள் சொல்லும் பதிலை தெரிந்து கொள்ளலாம்.
கர்ப்பிணிகள் காபி குடிக்கலாமா?: கர்ப்ப காலத்தில் பெண்கள், நாள் ஒன்றுக்கு 200 மி.கி மற்றும் அதற்கும் குறைவான காஃபின் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறது தி அமெரிக்கன் காலேஜ் ஆஃப் அப்ஸ்டேட்ரிசியன்ஸ் அண்ட் கைனகாலஜிஸ்ட் (ACOG). கர்ப்பிணிகள் காபி குடிக்கலாம் என்றாலும், அதன் உட்கொள்ளல் அளவை கண்காணிப்பது அவசியம் என குறிப்பிடுகிறது.
எவ்வளவு காபி குடிப்பது நல்லது?: பேபி சென்டரின் அறிக்கையின்படி, ஒரு நாளைக்கு 200 மி.கி அல்லது அதற்கும் குறைவாக கர்ப்பிணிகள் காபி குடிக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும், சிறிய அளவிளான காஃபின் நுகர்வும் கர்ப்ப காலத்தில் ஆபத்துகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் சில வல்லுநர்கள்
அதிகமான காஃபின் நுகர்வு, கர்ப்ப காலத்தை ஒப்பிடுகையில் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சி சிறியதாக இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். கர்ப்ப காலத்தில் தினமும் 200 மி.கி காஃபின் உட்கொள்ளும் பெண்களின் குழந்தையை விட காபி குடிக்காத கர்ப்பிணிகளின் குழந்தைகள் பெரியதாக இருப்பதாக நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் ஆராய்ச்சியாளரிகள் கண்டறிந்துள்ளனர்.
வளர்ச்சியில் தடை: ஆராய்ச்சியின் படி, காஃபின் கருப்பை மற்றும் நஞ்சுக்கொடியில் உள்ள இரத்த நாளங்களை சுருங்கச் செய்வதாகக் கூறப்படுகிறது. இது கருவுக்கு இரத்த விநியோகத்தைக் குறைத்து குழந்தையின் வளர்ச்சியைத் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், அதிகளவிளான காஃபின் சிசுவின் ஹார்மோனில் மாற்றம் செய்து, குழந்தை வளர்ச்சியின் போது உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
கரு சிதைவு, குறைந்த எடை, IUGR போன்ற பிரச்சனைகளுக்கும் காஃபின் உட்கொள்ளலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாதவிடாய் வலி: நிவாரணத்திற்கு மாத்திரை எடுத்துக்கொண்டால் ஆபத்தா? மகப்பேறு மருத்துவர் விளக்கம்!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.