ETV Bharat / state

கடல் ஆமைகள்: இறால்களை சுவைக்க வந்து விசைப்படகில் மோதி உயிரிழக்கும் சோகம்! காப்பாற்ற என்ன வழி? - HOW TO SAVE SEA TURTLES

கடந்த வருடங்களை விட கடல் ஆமைகளின் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக வரும் தரவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடல் ஆமைகள்
கடல் ஆமைகள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2025, 8:08 PM IST

Updated : Jan 26, 2025, 3:57 PM IST

சென்னை: கடல் ஆமைகள் என்பது உலகின் மிக முக்கியமான மற்றும் பழமையான உயிரினமாகும். இவை கடந்த சில நாட்களாக சென்னை கடற்கரை பகுதிகளில் இருந்து கோவளம் கடற்கரை வரையில் அதிகளவு உயிரிழந்து கரை ஒதுங்குகிறது சூழலியல் ஆர்வலர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இயல்பை விட அதிகமான எண்ணிக்கையில் உயிரிழந்து வருவது தான் அச்சத்திற்கு முக்கியக் காரணம். எனவே, அதன் காரணங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நம்முடன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் உரையாடினர்.

ஆமைகள் உயிரிழப்பு குறித்து ட்ரீ தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சுப்ரஜா தாரினி நமது ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “நாங்கள் கடல் ஆமைகள் பாதுகாப்பு தொடர்பான வேலைகளை 2002-ஆம் ஆண்டிலிருந்து செய்து வருகிறோம்.

மீனவ கிராம மக்களை ஊக்குவித்து அவர்களை கடல் ஆமைகள் பாதுகாப்பில் இணைத்து, இரவிலும் அதிகாலையிலும் ரோந்து பணிகள் செய்ய வைத்து, நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெற்கு ஒரிசா, கோவா ஆகிய நான்கு மாநிலங்களிலும் கடல் ஆமை பாதுகாப்புகள் குறித்த விழிப்புணர்வுகள் மற்றும் அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

வனத்துறை, மீன்வளத்துறை, கடலோர காவல் குழுமம் மற்றும் கடலோர காவல் படை அவர்களையும் இணைத்து இந்த கடல் ஆமை பாதுகாப்புகள் செய்து வருகிறோம்.

ஆமைகள் உயிரிழப்பு காரணம்:

டிசம்பரில் இருந்து ஏப்ரல் வரையில், கடல் ஆமைகள் இனப்பெருக்கம் செய்து முட்டையிடும். மன்னார் வளைகுடாவில் எண்ணற்ற பவளப்பாறைகள் மற்றும் கடல் வளங்கள் இருக்கிறது. நிறைய கடல் ஆமைகள் அங்கேதான் வசிக்கின்றன. இந்த ஆமைகள் தங்களது இனப்பெருக்க காலத்தில் எந்தெந்த பகுதிகளில் முட்டையிட்டு குஞ்சு பொரித்ததோ; அதே இடத்தில் பெண் ஆமைகள் மீண்டும் வந்து முட்டை இட்டு செல்லும்.

கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கிடக்கும் ஆமை
கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கிடக்கும் ஆமை (ETV Bharat Tamil Nadu)

மன்னார் வளைகுடாவில் இருந்து தமிழ்நாடு, வடக்கு ஆந்திரா, மற்றும் ஒரிசா மாநிலத்தில் இருக்கக்கூடிய கடற்கரைகளில் முட்டையிடுவதற்கு பயணம் செய்யும். இந்த பயணத்தின் முக்கிய பாதையாக இருப்பது சென்னையின் கிழக்கு கடற்கரை தான்.

இந்த கடல்வழிப் பாதையில் செல்லும்போது, கரையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்குள் நீந்தி செல்லும். இந்த மாதிரியான நேரத்தில் பல விசைப்படகுகள் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் ஐந்து நாட்டிக்கல் மைல் (nautical mile) அதாவது 9.26 கிலோமீட்டருக்கு அப்பால் சென்று மீன் பிடிக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் கடல் காற்று அதிகமாக இருக்கும் என்பதால், உள்ளே சென்று மீன் பிடித்தால் டீசல் செலவு அதிகமாகும் என்று கூறி, மூன்று நான்கு கிலோ மீட்டருக்கு உள்ளேயே மீன்களைப் பிடிக்கின்றனர்.

டிசம்பர் இறுதி மற்றும் ஜனவரி மாதங்களில் இறால் மற்றும் கணவாய் மீன்கள் அதிகமாக கிடைக்கும் என்பதால், கரையில் இருந்து மூன்று நான்கு கிலோ மீட்டருக்கு உள்ளேயே மீன்பிடிப்பதற்கு வலைகளை வீசுகின்றனர்.

வலையில் சிக்கும் ஆமைகள்

ஆமைகளுக்கும் இறால் உண்பது மிகவும் பிடிக்கும். நாங்கள் மறுவாழ்வு மையத்தின் சார்பாக நடத்திய ஆய்வில் ஆமைகளுக்கு இறால் கொடுத்தோம். அது விரும்பி அதிகமாக உண்டது. இதனை சில ஆய்வாளர்களும் குறிப்பிட்டிருந்தனர். எனவே, இந்த வழியில் செல்லக்கூடிய ஆமைகள் இறாலை சாப்பிடுவதற்கு வந்திருக்கும். இந்த மாதிரியான சமயத்தில் விசைப்படகுகளில் மாட்டி உயிரிழக்கிறது.

இறந்து கிடக்கும் கடல் ஆமை
இறந்து கிடக்கும் கடல் ஆமை (ETV Bharat Tamil Nadu)

இது குறித்து விசைப்படகு மீன்பிடி தொழிலாளர்களிடம் கேட்டபோது, அவர்கள் நாங்கள் ஒவ்வொரு முறை மீன்பிடிப்பதற்கு வலையை போடும்போதும், நான்கு ஆமைகள் மாட்டிக் கொள்கிறது. இந்த நான்கு ஆமைகளில் கட்டாயம் ஒரு ஆமை இறந்து விடுகிறது. வலையில் மாட்டியவுடன், உடனே கடலில் போட்டு விடுவோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் சில மீனவர்கள் கூட கிறிஸ்துமஸ் திருநாளில் இருந்து இன்று வரைக்கும், தாங்கள் வீசும் வலைகளில் கண்டிப்பாக ஆமைகள் சிக்கிக் கொண்டிருக்கின்றன என்று கூறுகின்றனர்.

கடல் ஆமைகளில் அதீத இறப்பிற்கு காரணம் என்ன?

நாங்கள் மூன்று மாநிலங்களிலும் ஆமைகள் முட்டையிட்டு சென்ற தரவுகள் வைத்திருந்தோம். அதன் அடிப்படையில் 2024 ஆண்டு ஆமைகள் குறைவாகவே முட்டையிட்டுள்ளன.

கடல் ஆமைகள் உலகத்திலேயே மூன்று இடங்களில் முட்டைகளை அதிகமாக இடும். அது அமெரிக்காவின் கோஸ்ட்டா ரிக்கா, மெக்ஸிகோ, ஒரிசாவின் ருசிகுல்யா இந்த பகுதிகளில் தான் ஆமைகள் அதிகமாக முட்டையிடும்.

இவற்றில் ஒரு பகுதியான ஒரிசாவில் கணக்கெடுப்பின்படி, கடந்தாண்டு அதிகமாக முட்டை இடவில்லை என்பது தெரியவந்தது. எப்பொழுதும் லட்சக்கணக்கான ஆமைகள் வந்து இப்பகுதியில் முட்டையிட்டுச் செல்லும். ஆனால் 2024-இல் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே கடந்த வருடம் முட்டையிட்டுச் சென்றது.

முட்டைகள் இடும் கடல் ஆமை
முட்டைகள் இடும் கடல் ஆமை (ETV Bharat Tamil Nadu)

இவற்றில் சிற்றாமைகள் என்ற வகை ஆமை ஒரு வருடம் விட்டு அடுத்த வருடம் முட்டையிடும் தொடர்ச்சியாக முட்டையிடாது. எனவே 2024 இல் முட்டையிடாத ஆமைகள் இந்த வருடம் முட்டை இடுவதற்காக கடற்கரைப் பகுதியை நோக்கி வந்திருக்கின்றன. இப்படி அதிக ஆமைகள் வந்ததால் தான் விசை படகுகளில் மாட்டி அதிக எண்ணிக்கையில் உயிரிழக்கின்றன.

ஆமைகள் முட்டையிடும்போது இறக்கின்றது என்ற கூற்று தவறு:

ஆமைகள் முட்டையிடுவதற்கு வந்து முட்டையிட முடியாததால் இறந்து விடுகிறது என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கடல் ஆமைகள் டைனோசரஸ் காலத்தில் இருந்து வாழக்கூடிய உயிரினம். அவ்வளவு பழமையான உயிரினம் முட்டையிடுவதற்கு வெளிவந்து இறக்கிறது என்று சொல்வது சரியானதாக தெரியவில்லை.

ஆயிரம் கிலோமீட்டர்கள் தாண்டி வந்து எந்த கடற்கரையில் முட்டையிடுகிறதோ, அதே இடத்தில் மீண்டும் வந்து குஞ்சு பொரித்து செல்கிறது. முட்டையிடும் இடத்திலிருந்து மூன்று நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருந்து, 10-இலிருந்து 11 நாட்கள் இரண்டு அல்லது மூன்று முறையாக ஆமைகள் முட்டையிட்டுச் செல்லும். தன்னை தயார் படுத்திக் கொண்டுதான் ஆமைகள் முட்டையிட்டு செல்லும்.

ஒரு வகையில் கழிவுகள், நெகிழிகள் மற்றும் அறுந்து போன வலைகளால் ஆமைகள் இறப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம். இந்த முறை ஆமைகள் இறந்து போவதற்கு அதிக காரணம் விசைப்படகுகள் தான். ஆமைகள் பல்வேறு வகையான காலநிலை மாற்றத்தை சந்தித்துள்ளது எனவே அது இறப்பதற்கு காலநிலை மாற்றம் ஒரு காரணமாக இருக்காது.

ஐந்து நாட்டிகல் மைல் என்பது கணக்கீடு செய்யும் போது, கடற்கரையில் இருந்து கடலை கண்ணால் பார்க்கும் தொலைவு தான் ஐந்து நாடிகள் மயில் என்று குறிப்பிடுவர். இந்த தொலைவிற்குள் அதிகமாக விசைப்படகுகள் சில நாட்களாக தென்படுகிறது.

தடுக்கும் வழிமுறைகள்:

ஆமைகள் வலைகளில் மாட்டிக்கொண்டால் அதை விடுவிக்கும் போது சற்று மயக்கநிலையில் இருக்கும். அவ்வாறு மயக்க நிலையில் இருக்கும்போது அது தெளிவடைந்ததற்கு பின்னர் கடலில் நாம் விட வேண்டும் என்ற விழிப்புணர்வை நாங்கள் கொடுத்தோம்.

விதிப்படி பாரம்பரிய மீனவர்கள் 9.26 கிலோமீட்டருக்குள் மீன் பிடிக்கலாம். பாரம்பரிய மீனவர்களுக்கு எது நல்லதோ அதே தான் கடல் ஆமைகளுக்கும் நல்லது. இந்த சின்ன விதிமுறையை அனைத்து விசைப்படகு உரிமையாளர்களும் தொழிலாளர்களும் பின்பற்றினால் கடல் ஆமைகள் பாதுகாக்கப்படும்.

இது தொடர்பான அனைத்து அலுவலர்களும் இணைந்து விசைப்படகு உரிமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் விழிப்புணர்வு கொடுத்து மீன்பிடி சட்டத்திற்கு உட்பட்டு அவர்களின் எல்லைக்குட்பட்டு வலைகளை வீச வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். இது நடந்தால் ஆமைகளின் இறப்பைத் தடுக்கலாம்.

தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 2020-ஆம் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் கீழ் அனைவரும் பின்பற்றினாலே ஆமைகளின் இறப்புகளை தடுக்கலாம்.

ஆமைகள் இறப்பின் எண்ணிக்கை:

2024 டிசம்பர் 30-ஆம் தேதியிலிருந்து இன்று வரைக்கும் நீலாங்கரையிலிருந்து கோவளம் பகுதி வரைக்கும் 212 ஆமைகள் இறந்துள்ளது. செம்மஞ்சரில் இருந்து ஆலம்பரை மீனவ பகுதி வரைக்கும் 142 ஆமைகள் இறந்திருக்கிறது.

2023-இல் இருந்து 2024 வரை சென்னை கடற்கரை பகுதிகளில் 59 ஆமைகளும் மற்றும் செங்கல்பட்டு கடற்கரை பகுதிகளில் 63 ஆமைகளும் என்று மொத்தம் 122 ஆமைகள் உயிரிழந்துள்ளன. 2024 முதல் இன்று வரைக்கும் சென்னை கடற்கரைப்பகுதியில் 220 ஆமைகளும் செங்கல்பட்டு கடற்கரை பகுதிகளில் 133 ஆமைகளும் மொத்தம் 353 ஆமைகள் உயிரிழந்துள்ளன.

இது குறித்து ட்ரீ தன்னார்வ அமைப்பை சேர்ந்த ஆமை பாதுகாவலர் பனையூர் தேசப்பன் கூறுகையில், "நாங்கள் அதிகாலையில் 4 மணிக்கு கடலோரத்தில் ரோந்து பணியில் இருப்போம். தற்போது ஆமைகள் முட்டையிடும் காலமாக என்பதால், முன்னரே எழுந்து கடற்கரை பகுதிக்கு சென்று ஆமைகளை கண்காணித்து வருகிறோம். முட்டையிடும் ஆமைகள் இன்றளவில் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் ஆமைகள் அதிகமாக முட்டையிடவில்லை. ஆனா ஒரே ஒரு ஆமை மட்டும் தான் வந்துள்ளது. ஜனவரி ஒன்றிலிருந்து இன்று வரையில் இந்த பகுதியில் 42 ஆமைகள் இறந்துள்ளன. அவற்றை நான் மண்ணில் புதைத்து விடுவேன். மனதிற்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. ஆமைகள் மனிதர்களை விட அதிகமான நாட்கள் வாழக்கூடிய உயிரினம். அது இவ்வளவு சீக்கிரமாக இறப்பது கஷ்டமாக இருக்கிறது.

இந்த பகுதியில் நேற்று மட்டுமே ஏழு ஆமைகள்; இன்று நான்கு ஆமைகள் இறந்துள்ளன. ஆமைகள் இறந்து கரை ஒதுங்கிய உடனே நாங்கள் அதை பார்த்து அதற்கு எங்கே அடிபட்டு இருக்கிறது; எதனால் இறந்திருக்கும்; ஆமையின் நீளம் மற்றும் அகலம் என்ன, பின்னர் ஆமை ஓட்டின் நீளம், அகலம் ஆகியவற்றை கணக்கெடுப்போம்.

அது ஆண் ஆமையா அல்லது பெண் ஆமையா என்று குறிப்பில் எழுதிக் கொள்வோம். பின்னர் அவற்றை சுப்ரஜாவிடம் கொடுத்து விடுவோம். அவர் வனத்துறை அலுவலர்களிடம் இந்த தரவுகளை கொடுத்துவிடுவார். அதன் பின்னர் அந்த ஆமையை பள்ளம் தோண்டி புதைத்து விடுவோம்," என்றார்.

சுற்றுசூழல் சமநிலையில் ஆமைகளின் பங்களிப்பு:

  1. ஆமைகள் கடலுக்குள் இருக்கும் நத்தை வகைகள், காளான்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியவற்றை சாப்பிடும் போது மண்ணில் புதைந்திருக்கக் கூடிய ஆக்சிஜனை வெளியே வரச் செய்யும்.
  2. அதேபோல எல்லா ஆமைகளும் விரும்பி சாப்பிடக்கூடியது ஜெல்லி மீன். இந்த ஜெல்லி மீன் மீன் குஞ்சுகளையும் முட்டைகளையும் அதிகமாக உட்கொள்ளும். இந்த ஆமைகள் ஜெல்லி மீன்களின் பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.
  3. கழுகு மூக்கு ஆமைகள் கடலில் உள்ள பவளப்பாறைகளில் இருக்கக்கூடிய பஞ்சுகளை சுரண்டி சாப்பிடும். இதனால் அந்த பகுதியானது சிறிய மீன்களின் இருப்பிடமாக மாறுகிறது.
  4. பச்சை கடல் ஆமைகள் புல், பாசி, தாவரங்களை மட்டும் உட்கொள்ளும். அவற்றை உட்கொள்ளும் போது அந்தப் பகுதி அனைத்தும் சுத்தமாக இருக்கும். இதனால் அந்தப் பகுதியில் மட்டும் வியாபாரத்திற்கு தேவைப்படக்கூடிய மீன்கள் அதிகமாக விளைகின்றது. இது மிக முக்கியமான உற்பத்தி காரணி.
  5. ஆயிரம் ஆமைக்குஞ்சுகள் கடலுக்குள் சென்றால் ஒரு ஆமை குஞ்சு தான் இனப்பெருக்க வயதிற்கு வரும். மற்ற 999 ஆமைக் குஞ்சுகள் பெரிய மீன்களுக்கு இரையாகி விடுகிறது. மீனவர்களுக்கு பெரிய மீன்களை பிடிப்பது தான் குறிக்கோளாக இருக்கும். அந்த மீன்களை நாம் தான் உட்கொள்வோம். அதனால் நமது வாழ்வில் உணவு சங்கிலியில் ஒரு அங்கமாக இருக்கிறது.
  6. புலி சிங்கம் காட்டிற்கு எவ்வளவு முக்கியமாக இருக்கிறதோ, அதே மாதிரி ஆமைகள் வெவ்வேறு இடங்களில் கடலில் அணைத்து பகுதிகளிலும் செல்வதால் கடல் வளம் அனைத்து பகுதிகளும் சமநிலையில் இருக்கிறது. ஆமைகள் காப்பாற்றப்பட்டால் கடல் வளம் நன்றாக இருக்கும்.

கடலோரப் பகுதிகளில் மணல் திட்டுக்கள் இருக்கக்கூடிய இடங்களில் ஹைபோமியா கொடிகள் இருக்கும். அதில் சில உயிரினங்கள் இருக்கும். பொதுவாகவே கடற்கரை ஓரங்களில் சத்தான மணல் இருக்கும் இடங்கள் மிகவும் குறைவு. இதனால் மண்வளம் சற்று அப்பகுதியில் குறைவாக இருக்கும்.

ஆமைகள் அப்பகுதியில் வந்து முட்டை இட்டுச் செல்வதனால் அங்கு இருக்கக்கூடிய முட்டை தோல்கள் இறந்து போன குஞ்சுகள் அவை அனைத்தும் அந்த மணல்களில் மக்கி சத்துப் பொருளாக மாறுகிறது. இதனால் கடற்கரை ஓரங்களில் இருக்கக்கூடிய உயிரினங்களுக்கு மிகவும் ஒரு சத்து காரணியாக இருக்கிறது.

ஆமைகள் உயிரிழப்பு தொடர்பாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பல்வேறு துறை அதிகாரிகள் கொண்ட பணிக்குழுவை ஜனவரி 21 அன்று தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் தலைமை வன உயிர் பாதுகாவலர் தலைமையிலான குழுவில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை, மீன்வளத்துறை, கடலோர காவல் படை தமிழ்நாடு அரசின் கடலோர பாதுகாப்பு குழு உள்ளிட்ட பல்வேறு துறைகள் அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவிற்கு ஆமைகள் இறப்பை தடுப்பது மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கவும், ஆமைகள் இறந்தால் உடனடியாக உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து அதற்கான காரணத்தை கண்டறியவும், காரணத்தின் அடிப்படையில் இறப்பை தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்க்கொள்ளவும், வலைகளை பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மேலும் கடலோர பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடன் சேர்ந்து இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் என்ற அறிவுறுத்தல்கள் இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

Last Updated : Jan 26, 2025, 3:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.