சென்னை: 2025 ஆம் ஆண்டு நடைபெறும் 97வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதி பரிந்துரைத்து பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில், லைவ் ஆக்ஷன் குறும்பட பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த குறும்படமான அனுஜா இடம்பெற்றுள்ளது.
ஆஸ்கர் விருதுகளுக்கான மொத்த பிரிவுகளுக்குமான இறுதிப்பட்டியல் இன்று மாலையில் இருந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் LIVE ACTION SHORT FILM பிரிவில் 180 குறும்படங்களுடன் போட்டியிட்டு இறுதி பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது இந்திய குறும்படமான அனுஜா. ஆடம் ஜெ கிரேவ்ஸ் (Adam J. Graves) இயக்கியுள்ள இந்த குறும்படம் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனையை பற்றி பேசுகிறது.
Short on time, big on talent, here are this year's nominees for Live Action Short Film. #Oscars pic.twitter.com/Wx0TZIpUen
— The Academy (@TheAcademy) January 23, 2025
இப்போது ஆஸ்கர் மீது இந்தியாவிற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை இந்த குறும்படம் மட்டுமே. காரணம் இந்தியா சார்பில் அனுப்பட்ட முழுநீளத் திரைப்படமான 'லாபடா லேடிஸ்' (Laapataa Ladies) ஆஸ்கர் குழுவால் தேர்வு செய்யப்படவில்லை. கான்ஸில் விருது வென்ற மிகவும் எதிர்பார்த்த 'ஆல் வி இமாஜின் அச் லைட்' (All We Imagine as Light) திரைப்படமும் தேர்வு செய்யப்படவில்லை.
இந்த குறும்படம் ஆஸ்கர் வெல்ல அதிக வாய்ப்பதற்கான இன்னொரு காரணம் குனீத் மோங்கா கபூர் . 95வது ஆஸ்கர் விருதுகளில், சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற The Elephant Whisperers ஆவணப்படத்தின் தயாரிப்பாளர். இவர்தான் இந்தக் குறும்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர். மேலும் நடிகை பிரியங்கா சோப்ராவும் இதன் தயாரிப்புக் குழுவில் உள்ளார். எனவே இம்முறை ஒரு ஆஸ்கராவது கிடைக்கும் எனப் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: தனது உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை நெகிழ வைத்த நடிகர் சைஃப் அலி கான்
மேலும் ஆஸ்கர் விருது விழா மார்ச் 2ம் தேதி நடைபெற உள்ளது. எனவே எந்த படங்கள் விருது வெல்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். விரைவில் இந்த குறும்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.