ETV Bharat / bharat

தெலங்கானா சுரங்க விபத்து மீட்பு பணிகளில் முன்னேற்றம் இல்லை...புவியியல் துறை வல்லுநர்களுக்கு அழைப்பு! - RESCUE OPS ENTER DAY 4

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூலில் உள்ள ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாயில் உள்ள சுரங்கத்தில் பாதி திடீரென சரிந்ததில் சிக்கிய எட்டுப்பேரை மீட்கும்பணி நான்காவது நாளாகத் தொடருகிறது.

ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாயில் உள்ள சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்
ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாயில் உள்ள சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் (PTI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2025, 2:49 PM IST

நாகர்கர்னூல்: தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூலில் உள்ள ஸ்ரீசைலம் இடது புற கால்வாய் சுரங்கம் கடந்த சனிக்கிழமையன்று பகுதி அளவு சரிந்து விழுந்த நிலையில் அதில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணி நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது.

மீட்பு பணிகளை விரைவுபடுத்துவதற்காக தெலங்கானா அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.சுரங்கம் உள்ளிட்ட பணிகளில் நிபுணத்துவம் பெற்ற தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம், இந்திய புவியியல் சர்வே நிறுவனம் ஆகியவற்றை சேர்ந்த வல்லுநர்களுக்கு மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர்
மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் (ETV Bharat)

இதனிடையே, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படை, ராணுவம், இதர முகமைகள் உள்ளிட்டவற்ற சேர்ந்த குழுவினர் செவ்வாய்கிழமையன்றும் தொடர்ந்து மீட்பு பணிகளில் டுபட்டனர். ஒரு பகுதி அளவு சுரங்கம் சரிந்து விபத்து நேரிட்டு 72 மணி நேரம் கட்ந்த நிலையில் அதில் சிக்கியுள்ள 2 பொறியாளர்கள், 2 தொழிநுட்ப பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேரின் நிலை என்ன என்பது பெரும் கவலைக்கு உரியதாக இருக்கிறது. சுரங்க விபத்தின் காரணமாக அந்தப் பகுதியை சூழ்ந்துள்ள அடர்த்தியான சேறு, இரும்பு கம்பிகள், சிமெண்ட் பிளாக்குகள் ஆகியவற்றின் வழியே விபந்து நடந்த இடத்தை அடைய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்கள், ஐடி உழியர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை! சிக்கிய மூவர்!

இதனிடையே, சுரங்கப்பகுதியில் முகாமிட்டுள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பி.சந்தோஷ், "சுரங்கத்தில் அதிகரித்திருக்கும் தண்ணீரை வடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எந்த ஒரு மீட்பு பணியை முன்னெடுக்கும்போது சுரங்கத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்போது வரை சுரங்கத்தில் சிக்கியவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. மேலும் சுரங்கத்தில் சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சுரங்கத்தின் இறுதியில் உள்ள 40 அல்லது 50 மீட்டர் பகுதிக்குள் மட்டும் மீட்புப்படையினரால் செல்ல முடியாத சூழல் உள்ளது. இந்திய புவியியல் சர்வே நிறுவனம் உள்ளிட்டவற்றின் வல்லுநர்கள் இங்கு வர உள்ளனர், சேறு மற்றும் சுரங்க இடிபாடுகள் குவிந்திருப்பதால் உள்ளே சிக்கியிருக்கும் எட்டுப்பேரை நெருங்க முடியவில்லை," என்றார்.

ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாயில் உள்ள சுரங்கத்தில்  தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றும் பணி
ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாயில் உள்ள சுரங்கத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றும் பணி (ETV Bharat)

துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்கா மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி ஆகியோரும் சுரங்கப்பகுதிக்கு வர உள்ளனர். ராணுவம், கடற்படை, இதர முகமைகள், மத்திய, மாநில பேரிடர் மேலாண்மை படையினரின் குழுக்கள் என 584 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எரிவாயு கட்டர்கள், உலோக கம்பிகள் ஆகியவற்றைக் கொண்டு தடுப்பில் உ்ள இரும்பு கம்பிகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

2023ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் நேரிட்ட சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ரேட் மைனர்ஸ எனப்படும் மீட்புக் குழுவினர் நேற்று வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்களும் மீட்பு பணிகளுக்கான உதவிகளைசெய்து வருகின்றனர். எனினும் கூட சிக்கியிருப்பவர்களை மீட்க இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சுரங்கத்தில் சிக்கியிருக்கும் 8 பேரின் உறவினர்கள், நண்பர்கள் கவலையோடு காத்திருக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.