புதுடெல்லி: இந்தியாவின் பெயரளவிலான தனிநபர் ஜிடிபி 2025ஆம் நிதி ஆண்டில் நிதி ஆண்டு 2023ஆம் ஆண்டை விடவும் அதிகமாக ரூ.35,000 ஆக இருக்கும் என்று எஸ்பிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
எஸ்பிஐ வங்கியின் அறிக்கையின்படி உண்மையான ஜிடிபி வளர்ச்சி குறைந்து வரும் நிலையில், வளர்ச்சியற்ற பெயரளவிலான தனிநபர் ஜிடிபி 2025ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023ஆம் நிதி ஆண்டை காட்டிலும் பெயரளவிலான தனிநபர் ஜிடிபி நிதி ஆண்டு 2025ல் ரூ.35000 ஆக அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது.
பரந்த ஜிடிபி வளர்ச்சி குறைந்து வரும் நிலையில் இந்த வளர்ச்சி என்பது சாதகமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. எஸ்பிஐ அறிக்கையின்படி, உண்மையான ஜிடிபி வளர்ச்சி கடுமையாக குறைந்துள்ள நிலையில் பெயரளவிலான தனிநபர் ஜிடிபி வளர்ச்சி என்பது கிட்டத்தட்ட தேக்க நிலையில் உள்ளது. பெயரளவிலான தனிநபர் ஜிடிபி என்பது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, தோராயமான தனிநபர் ஜிடிபி 2025ஆம் நிதி ஆண்டில் கிடத்தட்ட ரூ.35,000த்துக்கும் அதிகமாக இருக்கும் என தேசிய தரவு அலுவலகம் மதிப்பிட்டுள்ளது. தேசிய தரவு அலுவலகத்தின் முன்கூட்டியே கணிக்கப்பட்ட ஜிடிபி என்பது இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சியை 2025ஆம் நிதி ஆண்டில் 6.4 சதவிகிதமாக நிலை நிறுத்தும்.
இதையும் படிங்க: யார் அந்த சார்? தூக்குத் தண்டனையை சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் முதல்வர் ஆற்றிய உரை!
மேலும் இந்த அறிக்கையில், தனியார் நுகர்வு என்பது பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இயக்கியாக வெளிப்படும். 2025ஆம் நிதி ஆண்டில் உண்மையான நிபந்தனைகளின்படி 7.3 சதவிகிதமாக உயர்ந்த வளர்ச்சியை பதிவு செய்யும். தனிநபர் அடிப்படையில், தனியார் நுகர்வு 6.3 சதவிகிதமாக அதிகரிக்கும். வாடிக்கையாளர் செலவு செய்வதில் ஒரு வலுவான மீட்சியை பிரதிபலிக்கிறது
தனிநபர் ஜிடிபி வளர்ச்சியான 5.3 சதவிகித்தை விடவும் தனிப்பட்ட தனிநபர் இறுதி நுகர்வு செலவு வளர்ச்சி 6.3 சதவிகிதமாக அதிகரிக்கும். குடும்பங்களின் நிதி ஒழுக்கத்தில் ஒரு மாற்றத்தை இந்த போக்கு குறிப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதிக நுகர்வு வளர்ச்சி தொடர்புடைய வருவாய் என்பது, குடும்பத்தினரின் சேமிப்பில் குறைவு ஏற்பட்டு செலவு நீடித்திருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறது என எஸ்பிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சவால்களுக்கு இடையே இந்தியாவின் நுகர்வை இயக்கும் பொருளாதாரத்தின் நெகிழ்வை இந்த கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துகின்றன. எனினும், குறிப்பாக சேமிப்பு அளவு தொடர்ந்து குறையும் நிலையில் இந்த போக்கு நீடித்திருப்பது குறித்த கேள்வியை எழுப்புகிறது. தனிப்பட்ட தனிநபர் இறுதி நுகர்வு செலவின் வளர்ச்சி, தனிநபர் ஜிடிபி வளர்ச்சியான 5.3 சதவிகிதத்தை விடவும் அதிகமாக இருக்கும். இது உண்மையாக இருந்தால்,2025ஆம் நிதியாண்டில் சேமிப்பில் நிகர இழப்பானது தனியார் நுகர்வுக்கு நிதியாக அளிக்கப்பட்டது என்று கூறுகிறது.
எஸ்பிஐயின் அறிக்கையானது இந்தியாவின் பொருளாதாரப் பாதையில் முக்கியமான நுண் தகவல்களை வழங்கி உள்ளது. தனிநபர் வருமானம் மற்றும் வளர்ச்சியின் பரந்த விவரிப்பை வடிவமைப்பதில் நுகர்வு போன்ற.தனிப்பட்ட பொருளாதாரத்தை சுட்டிக்காட்டி அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.