ETV Bharat / entertainment

எமர்ஜென்சி படம் பார்க்க பிரியங்கா காந்திக்கு பாஜக எம்.பி கங்கனா ரனாவத் அழைப்பு! - KANGANA INVITES PRIYANKA GANDHI

Kangana Ranaut: காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்திக்கு எமர்ஜென்சி படம் பார்க்க பாஜக எம்.பி கங்கனா ரனாவத் அழைப்பு விடுத்துள்ளார்.

கங்கனா ரனாவத் எமர்ஜென்சி
கங்கனா ரனாவத் எமர்ஜென்சி (Cedits: Kangana Ranaut X page, ANI)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 8, 2025, 4:51 PM IST

சென்னை: இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி காலகட்டத்தை கதைக் கருவாக வைத்து, 'எமர்ஜென்சி' என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார் கங்கனா ரனாவத். நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும், கங்கனா ரனாவத்தின் மணிகர்னிகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் அனுபம் கெர், மஹிமா சவுத்ரி, மிலிந்த் சோமன், ஷ்ரேயாஸ் தல்படே, விஷக் நாயர் மற்றும் மறைந்த சதீஷ் கௌஷிக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த 2024ஆம் ஆண்டு ஜுன் 14ஆம் தேதி, செப்டம்பர் 6ஆம் தேதி, என இருமுறை 'எமர்ஜென்சி' திரைப்படத்தின் ரீலிஸ் தேதி முடிவு செய்யப்பட்டு பின்பு ஒத்தி வைக்கப்பட்டது. சீக்கிய அமைப்புகளிடமிருந்து எழுந்த எதிர்ப்புகள் உட்பட சில பிரச்சனைகளால் படம் வெளியாவது கேள்விக்குறியாக இருந்தது.

இந்நிலையில் எமர்ஜென்சி திரைப்படமானது வரும் ஜனவரி 17ஆம் தேதி வெளியாகும் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இம்முறையாவது படம் வெளியாகுமா என சந்தேகமான நிலையில், எமர்ஜென்சி படத்தின் இரண்டாவது டிரெய்லர் ஜனவரி 6ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் ரீலிஸ் தேதி ஜானவரி 17ஆம் தேதி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜயின் கடைசி படத்தில் நடிக்கும் அசுரன் நடிகர்!... 'தளபதி 69’ அப்டேட்

பட வெளியீட்டு பணிகள் குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய கங்கனா ரனாவத், “நான் பிரியங்கா காந்தியை நடாளுமன்றத்தில் சந்தித்தேன். முதலில் அவரிடம் நீங்கள் எமர்ஜென்சி திரைப்படத்தை பார்க்க வேண்டும் என கூறினேன். அதற்கு அவர் மிகவும் கனிவாக பார்க்கலாம் என பதிலளித்தார். அவர் படத்தை பார்க்க விரும்புகிறாரா? என பார்க்கலாம். இத்திரைப்படமானது எமர்ஜென்சி காலக்கட்டம் மற்றும் ஒரு நபரைப் பற்றிய உணர்வுப்பூர்வமான சித்தரிப்பாக இருக்கும். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மிகவும் கண்ணியத்துடன் சித்தரிப்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டுள்ளேன்.

ஏனெனில், அவரைப் பற்றி ஆராயத் தொடங்கியபோது தான், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவர் கூறித்த சர்ச்சைக்குரிய விஷயங்களையும் தெரிந்து கொண்டேன். அவற்றில் நிறைய கவனிக்கத்தக்க விஷயங்கள் இருந்தன. எல்லோரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். எமர்ஜென்சி காலகட்டத்தின் போது நடந்த சில விஷயங்களைத் தவிர, அவர் மிகவும் நேசிக்கப்பட்டார். அவர் மிகவும் கொண்டாடப்பட்டார். மூன்று முறை பிரதமராக பதவி வகிப்பது ஒன்றும் சாதாரணமானதல்ல." என்று கூறினார்.

இந்திய வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலக்கட்டங்களில் ஒன்றான கடந்த 1975- 1977ஆம் ஆண்டு வரையிலான 21 மாதங்கள் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட அவசர நிலை குறித்து ஆராய்கிறது ’எமர்ஜென்சி’ திரைப்படம். இத்திரைப்படத்தில் ஒரு தலைவரின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பதைப் போலவே, இதற்கு முன்பாக தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று ’தலைவி’ எனும் படத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.