ETV Bharat / state

HMPV வைரஸ் குறித்து அச்சமடைய தேவையில்லை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்! - MA SUBRAMANIAN

மனித மெட்டாப்நியூமோவைரஸ்( HMPV) குறித்து பொதுமக்கள் அச்சமைடைய தேவையில்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன், HMPV வைரஸ் கோப்புப்படம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன், HMPV வைரஸ் கோப்புப்படம் (@Subramanian_ma, ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2025, 5:47 PM IST

சென்னை: தமிழகத்தில் HMPV- மனித மெட்டாப்நியூமோவைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில், இது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும், இந்த வைரஸ் தொற்றுக்கு எந்த சிகிச்சையும் மேற்கொள்ளாமல் தனியாக இருந்தாலே வைரஸ் தொற்று சரியாகிவிடும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் சென்னை மற்றும் சேலத்தில் 2 பேர் HMPV வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், HMPV VIRUS தொடர்பாக மருத்துவத்துறை உயர் அலுவலர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில், மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலமையில் இன்று (ஜனவரி 07) செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி (ETV Bharat Tamilnadu)

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, “2019-ஆம் ஆண்டு இறுதியில் கரோனா வைரஸ் தாக்குதல் தொடங்கியதும், அதன் பாதிப்புகள் மற்றும் விளைவுகளை அறிந்த WHO - உலக சுகாதார அமைப்பு மருத்துவ நெருக்கடி பிரகடனத்தை வெளியிட்டது. ஆனால், HMPV வைரஸ் தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. மத்திய அரசும், மாநில அரசு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகங்களுக்கு எந்த அறிவுறுத்தல்களை வழங்கவில்லை.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் நேற்று (ஜனவரி 06) நடைபெற்ற காணொளி வாயிலான கூட்டத்தில், இந்த வைரஸ் குறித்து பயப்பட வேண்டாம் என்றும், பதற்றப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். HMPV வைரஸ் பரவியது முதல் தமிழகத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மத்திய மருத்துவத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர்.

நுரையீரல் பாதிப்பு ஏற்படும்:

50 ஆண்டுகளுக்கு முன்பாகவே HMPV வைரஸ் பரவியுள்ளது. ஆனால், இவை கடந்த 2001 கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு இருந்தால் மூன்று முதல் ஐந்து, ஆறு நாட்களுக்கு இருமல் சளி பாதிப்பு இருக்கும், பின்னர் சாியாகிவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குழந்தைகளை அச்சுறுத்தும் HMPV..கரோனாவை போல பாதிப்பா? மருத்துவர் சொல்வது என்ன?

பதற்றம் அடைய வேண்டாம்?

HMPV வைரஸ் பொருத்தவரை, மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குக்குள் தானாகவே குணமாகிவிடும். இதற்கென்று பிரத்யேகமான சிகிச்சை இல்லை. இதற்கு எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமல் தனியாக இருந்தாலே இந்த வைரஸ் தொற்று சரியாகிவிடும். இது குறித்து பதற்றம் அடைய வேண்டிய அவசியம் இல்லை. வைரஸ் தொற்று பரவி வரும் நிலையியில், முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை அவசியம் பின்பற்ற வேண்டும்.

தற்போது தமிழகத்தில், சேலத்தில் 65 வயதுமிக்க நபருக்கும், சென்னையில் 45 வயதுமிக்க நபருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடல் நலக்குறைவு என்று சோதனை செய்து கொண்டால் ஒரு சில நபர்களுக்கு இந்த வைரஸ் இருக்கும். பொதுவெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்துச் செல்ல வேண்டும். சானிடைசர் (Hand Sanitiser ) பயன்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது.

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை கை கழுவினால் எந்த பாதிப்பும் ஏற்படாது . அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பரிசோதனை மையம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் வைரஸ் பாதிப்பு இருந்தால் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்”இவ்வாரு அவர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.