பசுந்தேயிலைக்கு உரிய விலை வேண்டிய போராட்டத்தில் முடிவு.. ஆடல் பாடலுடன் உண்ணாவிரத்தை கைவிட்ட படுகர் மக்கள்! - farmers protest in Nilgiris
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/21-09-2023/640-480-19567102-thumbnail-16x9-ngl.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Sep 21, 2023, 10:34 AM IST
நீலகிரி: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, 20 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய படுகர் இன விவசாயிகள், பாரம்பாரிய ஆடல், பாடலுடன் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நட்டக்கல் பகுதியில், பசுந்தேயிலைக்கு உரிய விலை வேண்டி, ‘நாக்கு பெட்டா படுகர் நலசங்கம்’ சார்பில், படுகர் இன விவசாயிகள் கடந்த 1ஆம் தேதி முதல் 20 நாட்களாக, அவர்களின் பாரம்பரிய உடையணிந்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், தேயிலை விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து மாவட்ட அளவில் பரவி வந்தது.
அதனைத் தொடர்ந்து, பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நாக்கு பெட்டா படுகர் நலசங்கம் சார்பில், படுகர் இன விவசாயிகள் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்நிலையில், வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேயிலை ஆதார விலையை வழங்க, தேயிலை வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.
இதனால், 20 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த படுகர் இன மக்கள், தங்கள் பாரம்பரிய உடையுடன் நடனம் ஆடியும், இனிப்புகள் வழங்கியும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.