என் மண் என் மக்கள்; கொட்டும் மழையில் அண்ணாமலை நடைபயணம்!
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியின் ஒன்பது ஆண்டுகால சாதனையை மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் கடந்த ஜூலை 28ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, அண்ணாமலை பல்வேறு மாவட்டங்களில் நடைபயணத்தை மேற்கொண்டார்.
அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், உதகையில் நடைபயணம் நேற்று மேற்கொண்டு நிறைவு பெற்ற நிலையில் இன்று குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் இருந்து நடைபயணம் தற்போது கொட்டும் மழையிலும் நடைபெற்று வருகிறது. நடைபயணமானது குன்னூரில் முக்கிய பிரதான வீதிகள் வழிகளான பெட்போர்டு, YMCA, மவுண்ட் ரோடு வழியாக பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள வி.பி.திடலில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
தற்போது, ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் இன மக்கள் தங்களின் பாரம்பரிய நடனம் ஆடி, அண்ணாமலைக்கு வரவேற்பு அளித்தனர். மேலும், சாலையின் இருபுறமும் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலைக்கு மலர்கள் தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.