ViralVideo: பள்ளிக் கட்டடத்தில் தத்துரூபமாக வரையப்பட்டிருக்கும் பஸ் - paintings for school in tenkasi

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 18, 2023, 4:14 PM IST

தென்காசி மாவட்டம்: கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள எல்லா பள்ளிக் கூடங்களிலும், பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களைக் கொண்டு  மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பள்ளிகள் அனைத்திலும் சுத்தம் செய்யும் பணிகளும், பள்ளிக் கட்டடத்தின் தரத்தை உயர்த்தும் வகையில் அனைத்து பள்ளிகளும் மாற்றுருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், தென்காசி மாவட்டத்தின் பல பள்ளிகள் வண்ண மயமாக்கப்பட்டு வருகின்றன. சுரண்டைப் பகுதியில் மழலையர் பள்ளி அமைந்து உள்ளது. இப்பள்ளியின் சுற்றுச்சுவர்கள் முழுவதும் வண்ண ஓவியங்களால் வரையப்பட்டு உள்ளது. பள்ளிகள் என்றாலே குழந்தைகள் வரத் தயங்கும் நிலையை மாற்றி அமைக்கும் நோக்கில் பள்ளியின் சுற்றுச் சுவரை கண்களைக் கவரும் விதமாக மாற்றி அமைத்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியில், குழந்தைகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஆங்கிலச் சொற்கள், குழந்தைகள் விரும்பும் கார்டூன்களான டோரா, புஜ்ஜி மற்றும் கண் கவர் ஓவியங்களும் வரையப்பட்டு உள்ளது. இந்தத் தனியார் பள்ளியில் பேருந்து நிற்பது போல தத்ரூபமாக வரையப்பட்டு இருப்பது சாலையில் கடப்போரை ஈர்க்கும் விதமாக அமைந்து உள்ளது.

மேலும் பேருந்து நிற்பது போல தத்ரூபமாக வரையப்பட்டு இருக்கும் பள்ளியின் வீடியோவும் சமூக வலைதளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகிக் கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: பள்ளி கல்வித்துறையில் மீண்டும் இயக்குநர் பதவி - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் கோரிக்கை

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.