துருக்கி - ரஷ்ய ராணுவ வாகனங்கள் மீது குர்து இன மக்கள் கல்வீச்சு! - சிரியா உள்நாட்டுப் போர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4982699-thumbnail-3x2-syria.jpg)
சிரியாவின் கோபேன் நகரில் ரோந்து சென்ற ரஷ்யா - துருக்கி ராணுவ வாகனங்களை குர்து இன மக்கள் கல் எரித்து விரட்டி அடித்தனர். மேலும், துருக்கிப் அதிபர் டயீப் எர்டோகன் ஒரு பயங்கரவாதி என கோஷம் எழுப்பினர்.
வடக்கு கிழக்கு சிரியாவில் இருந்து கடந்த மாதம் அமெரிக்கப் படையினர் விலகியதை அடுத்து, அங்குள்ள குர்து இனப் போராளிகளுக்கு எதிராக, துருக்கிப் படையினர் தாக்குதல் மேற்கொண்டனர். தொடர்ந்து, ரஷ்யாவுடன் ஒப்பந்தமிட்டுக்கொண்ட துருக்கி, குர்துகள் மீதான ராணுவத் தாக்குதல்களை சில நிபந்தனைகளுடன் நிறுத்திக்கொண்டது.
இந்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்கவே துருக்கி - ரஷ்யா ராணுவத்தினர் இதுபோன்ற ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.