உருக்குலைந்த வாழைத்தோட்டம்.. நிலைகுலைந்த நெல்லை விவசாயி..! அரசு இழப்பீடு வழங்கக் கோரிக்கை - tirunelveli news in Tamil
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: தலைவன்விளை பகுதியைச் சேர்ந்த விவசாயி கதிரேசன். இந்நிலையில், இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வாழை சாகுபடி செய்திருந்தார். இந்த நிலையில், அவரின் வாழைத்தோட்டத்தில் நேற்று (ஜூன் 10) திடீரென பிடித்த தீப் பிடித்தது. மளமளவென எரிந்த இந்த தீயினால், அந்த தோட்டத்தில் பயிரப்பட்டிருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சக்கை ரக வாழைகள் நெருப்பில் கருகின. மேலும், இந்த விபத்தில் வாழைத்தோட்டம் முழுவதும் சொட்டு நீர்ப்பாசனத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பாசன குழாய்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. இதனால், செய்வதறியாது மனமுடைந்த விவசாயி கதிரேசன் இழப்பீடு கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள தலைவன்விளை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கதிரேசன். இவர் முதுமொத்தன் மொழி பஞ்சாயத்து பெட்டைக் குளம் செல்லும் வழியில் உள்ள சொக்கலிங்கபுரத்தில் உள்ள ஐந்து ஏக்கர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அதில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார். வாழைகள் அனைத்தும் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தன.
இந்நிலையில் நேற்று மாலை வாழைத்தோட்டத்தில் திடீரென தீப்பிடித்தது. திடீரென பிடித்த தீ காற்று வேகமாக வீசியதால் அங்குள்ள காய்ந்த புற்களில் பிடித்து வாழைத்தோட்டம் முழுவதும் பரவி தீப்பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக திசையன்விளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தண்ணீரைப் பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சக்கை ரக வாழைகள் மற்றும் சொட்டு நீர்ப்பாசனத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பாசன குழாய்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. எரிந்த வாழை மற்றும் சொட்டுநீர்ப்பாசன குழாய்களின் மதிப்பு மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. வாழைத்தோட்டத்தின் மேல் செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசியதில் தீ விபத்து ஏற்பட்டு வாழைத்தோட்டம் எரிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திசையன்விளை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Arikomban: நெல்லை வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானையை விட பொதுமக்கள் எதிர்ப்பு..!