கிணற்றுக்குள் விழுந்த யானையை போராடி மீட்ட வனத்துறையினர்! - odisha elephant rescue video
🎬 Watch Now: Feature Video
ஒடிசா மாநிலம் சுந்தர்கர்ஹ் மாவட்டத்திற்குட்பட்ட வனப்பகுதி அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு காட்டு யானை ஒன்று உணவு தேடி வந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக காட்டுயானை அங்கிருந்த கிணற்றிற்குள் விழுந்தது. இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறை அலுவலர்களுக்கு தகவலளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த யானையை தீயணைப்புத் துறையினர் மற்றும் கிராம மக்களின் உதவியோடு பத்திரமாக மீட்டனர். அது தொடர்பான வீடியோ காட்சி...