ETV Bharat / state

'முட்டை எறிந்தால் நாட்டு கோழி முட்டை'.. வெங்காயம் தூக்கலாக ஆம்லேட்.. - சீமான் காரசார பேச்சு..! - SEEMAN SLAMS PERIYAR

திராவிடம் என சொல் இருக்கும் வரை போராட்டம் தொடரும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

புதுவையில் சீமான் பேட்டி
புதுவையில் சீமான் பேட்டி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 9 hours ago

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெறும் கட்சி கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய சீமான் கூறியதாவது:

அம்பேத்கரையும், பெரியாரையும் ஒப்பிடுவது ஓர் முரண். இருவரின் சிந்தனையும் ஒன்றா? இருவருக்கும் சிலை வைத்தால் ஒன்றாகி விடுமா?. அம்பேத்கர் உலகின் தலைசிறந்த கல்வியாளர். பெரியார் தனக்கு தோன்றுவதை எல்லாம் பேசுபவர். அம்பேத்கர், நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கு யாரும் அடிமையில்லை என்றவர். ஆனால், பெரியார் சிந்தித்து, பேசியது, எழுதியது எல்லாம் தமிழ் பேரினத்திற்கு எதிரானது.

நாங்கள் கூறுவது பொய் எனக் கூறுவது எப்படி? எதற்கு ஆதாரம் தேவை? நாங்கள்தான் ஆதாரத்தை வெளியிட்டு வருகிறோம். விடுதலை, பிறந்தநாள் செய்தி என வெளியிட்டது. அதில், "இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் எதிரிகள். இவர்கள் நமக்கு எதிரானவர்கள்" எனக் குறிப்பிட்டனர். நமக்கு என்று யாரைக் குறிக்கிறீர்கள்? சமதர்மம், சமத்துவம்தானே உங்கள் கோட்பாடு? நமக்குக் கீழானவர்கள் எதிரி என்றால் அவர்கள் எந்த இனம்? இதைவிடக் கொடிய தீண்டாமை சிந்தனை உண்டா?.

தமிழன் இல்லாமல் யார் திராவிடன்?

திமுகதான் பாதுகாப்பு எனக் கூறும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை எதிரிகள் எனக் கூறுவதை எப்படி ஏற்கிறீர்கள்? "துளுக்கர்களுக்குக் கொடுக்கும் இடஒதுக்கீடு சாணியில் கால் வைப்பதற்குப் பதிலாக மலத்தில் கால் வைப்பதற்குச் சமம்" எனக் கூறியதற்குச் சான்று கேட்கவில்லையே?. தமிழ், தமிழர் அரசு எனப் பேசுபவர்கள் எல்லாம் பித்தலாட்டக் கருங்காலிகள் எனக் கூறியதற்குச் சான்று கேட்கவில்லையே? யார் திராவிடன்? தமிழன் இல்லாமல் யார் திராவிடன்?.

'தமிழ் மொழியை விட்டு ஒழி'

இஸ்லாமியர்களை வேறு நாட்டவர்கள் என்றார் பெரியார். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்த மண்ணின் பூர்வகுடி மக்கள். மொழி தான் அனைத்தையும் தருகிறது. ஆனால், அந்த தமிழ் மொழியை விட்டு ஒழி என்றார் பெரியார். பெரியாரின் எழுத்துக்களை அரசுடமையாக்கினால் உண்மை தெரிய வரும். அதை வெளியிட்டுவிட்டு என்னிடம் சான்று கேளுங்கள், நான் தருகிறேன்.

3 ஆயிரம் ஆண்டாக உள்ள தமிழ்த்தாய் உங்களைப் படிக்க வைத்தாரா எனக் கேட்கிறீர்கள்? 63 நாயன்மார்கள், ஆழ்வார்கள் குப்பையா? பக்தி இலக்கியத்தைக் குப்பை என்கிறீர்கள், "வள்ளுவன் ஒரு முட்டாள், கம்பன் ஒரு முட்டாள், இளங்கோவடிகள் எதிரி" என்கிறீர்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு, கம்பன் தந்த தமிழ்நாடு, வள்ளுவனை உலகிற்கு அளித்த தமிழ்நாடு என்கிறார் பாரதி.

தாத்தா என்பது பேத்தா ஆகிவிட்டது

திராவிடம் பேசி, எங்கள் முன்னோர்களை மறைக்கும்போது அதனை ஒழிக்க வேண்டிய தேவை வருகிறது. பெரியார் என் தாத்தா என்றேன். உண்மை தான். படிக்க படிக்க தான் தெரிகிறது, தாத்தா என்பது பேத்தா ஆகிவிட்டது. என் இன சாவில் தான் இவர்கள் என் எதிரி எனத் தெரிய வருகிறது. 2008-ல் என் தலைவரை (பிரபாகரன்) சந்திக்கும் வரை நானும் இந்தக் கூட்டத்தில் தான் இருந்தேன். அவரை சந்தித்த பிறகு தான் தமிழ் தேசிய அரசியலை தெரிந்து கட்டமைக்கிறேன்.

பெரியார் போராளியா?

வள்ளலாரைத் தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார்?. பெரியார் தான் அனைத்தையும் செய்தார் என்றால், எங்கள் முன்னோர்கள் செய்தது என்ன?. பெரியார் பெரும் சொத்துக்கு அதிபதி. சொத்துக்கு வாரிசு தேடி 72 வயதில் 26 வயது பெண்ணை திருமணம் செய்து வைத்தார். ஆனால் தனது பெரும் செல்வத்தை நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்காக விற்றவர் வ.உ.சி. அவர் கடைசி காலத்தில் வறுமையில் தள்ளப்பட்டார். இவர் பேராளியா.. பெரியார் போராளியா?. பெரியார் வாரிசு தேடிய முதலாளி. பெரியார் எனக்கு வேண்டாம். திராவிடம் பேசுபவர்களை ஒழிப்பது தான் எனது கொள்கை. அப்போது பெரியார் பற்றி தெளிவு இல்லை. படிக்க படிக்க தெரிகிறது. இனி பெரியார் வேண்டாம். இனி திராவிடத்தை ஒழிப்பது தான் வேலை. திராவிடம் என்ற சொல் ஒழியும்.

என்னை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது. வரலாற்றில் முதல்முறையாக இப்போது தான் ஒரு எதிரியைச் சந்திக்கிறார்கள். என்னை எதிர்த்துப் போராடுபவர்கள், தொடர்ந்து அதைச் செய்யுங்கள்.

8 எண் செருப்பை வீசுங்கள்

என்னை எதிர்த்து என் வீட்டிற்கு முன் போராட்டம் நடந்தால் நல்லது. அண்ணன் ராமகிருஷ்ணன் (பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர்) வந்தால் டீ போட்டு கொடு என்று மனைவியிடம் கூறியுள்ளேன். என் வீட்டுக்கு போராட வருபவர்களிடம் ஒரு கோரிக்கை தான். செருப்பு வீசினால் 7, 8 எண் செருப்பை வீசுங்கள். முட்டை எறிந்தால் நாட்டு கோழி முட்டையாக வீசுங்கள். முடிந்தால் வெங்காயம் தூக்கலாக ஆம்லேட் போட்டு வீசுங்கள்.

திராவிடம் என்ற சொல் இருப்பதினால் தமிழ்த்தாய் வாழ்த்தை எதிர்க்கிறேன். திராவிடம் என சொல் இருக்கும் வரை போராட்டம் தொடரும். பெரியார் நான் வந்த பாதை. தமிழ் தேசியம் நான் வழிநடத்தும் பாதை. என் கொள்கைக்கு எதிராக யார் இருந்தாலும் எதிரி தான். நான் வந்த வழியை என் மகனுக்கு காட்ட பெரியார் படத்தை என் வீட்டில் வைத்துள்ளேன். இவ்வாறு சீமான் பேசினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.